காசாவுக்கான மருத்துவ உதவி: கட்டார் - பிரான்ஸ் இடையே ஒப்பந்தம் கைச்சாத்து

OruvanOruvan

Qatar, France broker deal to get aid

காசாவில் பணயக்கைதிகளாக வைக்கப்பட்டுள்ள 45 இஸ்ரேலியர்களுக்கு அவசர மருத்துவ உதவிகளை வழங்கும் வகையில் பிரான்ஸ் மற்றும் கட்டார் இடையே ஒப்பந்தமொன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது.

இதன்படி, குறித்த மருத்துவ உதவியானது Rafah எல்லைபகுதியை கடப்பதற்கு முன்னதாக வழங்கப்படும் என இரு நாடுகளும் தெரிவித்துள்ளன.

இந்த நிலையில், இஸ்ரேலியருக்குத் தேவையான மருந்துகளை வழங்குவதற்கு ஈடாக காசா பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு மருத்துவம் மற்றும் ஏனைய மனிதாபிமான உதவிகள் வழங்கப்பட உள்ளதாக கட்டார் வெளியுறவு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதன்படி, பொது மக்களுக்கு எவ்வாறான உதவிகள் வழங்கப்படும் என்பது குறித்த விபரங்கள் வழங்கப்படவில்லை என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

பல மாதங்களுக்கு தேவையான மருத்துவப் பொதிகள் ஒவ்வொரு பயணக்கைதிக்கும் வழங்கப்படுவதுடன், இதற்கான நடவடிக்கைகளை சர்வதேச செஞ்சிலுவை சங்கம் முன்னெடுக்குமென குறிப்பிடப்பட்டுள்ளது.