உலகின் பேரழிவிற்கு காரணமாகும் பருவநிலை மாற்றம்: 2050ஆம் ஆண்டுக்குள் 14.5 மில்லியன் பேர் உயிரிழக்கலாம், உலக பொருளியல் மாநாடு அறிக்கை

OruvanOruvan

Heavy flooded

2050 ஆம் ஆண்டுக்குள் 14.5 மில்லியன் மனித உயிரிழப்பிற்கு பருவநிலை மாற்றம் காரணமாக அமையும் என உலகப் பொருளியல் மாநாட்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையினை உலகப் பொருளியல் மாநாடும் ஒலிவர் வைமேன் என்ற ஆலோசனை நிறுவனமும் இணைந்து தயாரித்து நேற்று முன்தினம் 16 ஆம் திகதி வெளியிட்டிருந்தன.

குறித்த அறிக்கையில்,

“பருவநிலை பாதிப்பால் ஏற்படக்கூடிய ஆறு பெரிய விளைவுகள் பட்டியலிடப்பட்டுள்ளது.

அவை, வெள்ளம், வறட்சி, வெப்ப அலைகள், புயல், கட்டுக்கடங்கா தீ ஆகியவற்றுடன் உயர்ந்துவரும் கடல் மட்டம் என்பனவாகும்.

இதில் வெள்ளத்தால் மட்டுமே 2050ஆம் ஆண்டுக்குள் 8.5 மில்லியன் மக்கள் உயிரிழப்பர். பருவநிலை மாற்றத்தால் ஏற்படக்கூடிய மிகக் கடுமையான மரண விகிதமாகும் என்று அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

இதற்கு அடுத்தபடியாக, வறட்சி காரணமாக 3.2 மில்லியன் மக்கள் உயிரிழக்கக்கூடும்.

வெப்ப அலைகளால் 2050ஆம் ஆண்டுக்குள் அமெரிக்க டாலர் 7.1 டிரில்லியன் அளவிலான பொருளியல் இழப்பு ஏற்படக்கூடும்.

பருவநிலை ஏற்படுத்தும் நெருக்கடியால் உலக மக்களிடையே சுகாதாரத்தில் ஏற்றத்தாழ்வு நிலை அதிகரிக்கும். இதில் எளிதில் பாதிக்கப்படக்கூடியவர்கள் அதிக சிரமப்படுவர் என்றம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஆப்பிரிக்கா, தென்னிந்தியா வட்டாரங்கள் எளிதில் பாதிக்கப்படக்கூடிய இடங்களாக விளங்குகின்றன.

அதற்குக் காரணம் அவர்களிடம் இருக்கும் குறைந்த அளவிலான வளங்கள், உள்கட்டமைப்பு வசதிகள் ஆகியவற்றுடன் அத்தியாவசிய மருத்துவ உபகரணங்கள் ஆகும்.

இதில் உலகப் பருவநிலை பங்குதாரர்கள் அனைவரும் உறுதியான நடவடிக்கைகள் எடுத்து கரிமவாயு வெளியேற்றத்தைக் குறைத்து பருவநிலை மாற்றத்தால் ஏற்படக்கூடிய எதிர்மறையான சுகாதார பாதிப்புகளைக் குறைக்கும்வேண்டும் எனவும் வுட்டிக்காட்டப்படட்டுள்ளது.