சீன மக்கள் தொகை தொடர்ந்து 2 ஆவது ஆண்டாகவும் சரிவு: பொருளாதாரத்தில் பெரும் தாக்கம்

OruvanOruvan

China's population

உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக இந்தியா வளர்ந்து வரும் நிலையில், கடந்த காலங்களில் மக்கள் தொகையில் முன்னணியில் இருந்த சீனாவில் மக்கள் தொகையில் சரிவு ஏற்பட்டு வருகிறது.

தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக மக்கள் தொகையில் சரிவு ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டை விட, 2023ல் சீனாவின் மக்கள் தொகை 20.8 லட்சமாக குறைந்து 140.97 கோடியாக உள்ளது.

சீன அரசாங்கம் நேற்று(17) வெளியிட்டுள்ள புள்ளிவிபரங்களில் இது தெரியவந்துள்ளது.

மக்கள் தொகை கட்டுப்பாட்டை இலக்காகக் கொண்டு குடும்பத்திற்கு ஒரு குழந்தை என்ற கொள்கையை கடுமையாக நடைமுறைப்படுத்தியதன் காரணமாக கடந்த ஆறு தசாப்தங்களில் காணப்படாத வகையில் கடந்த 20222 ஆம் ஆண்டு சீனாவின் மக்கள்தொகையில் கடுமையான வீழ்ச்சி ஏற்பட்டது.

சீனாவில் கடந்த 2022 ஆம் ஆண்டு 95.6 லட்சம் குழந்தைகள் பிறந்ததுடன், 2023 ஆம் ஆண்டில் 90.2 லட்சம் குழந்தைகள் பிறந்துள்ளன.

கோவிட் காரணமாக, கடந்த 2023 ஆம் ஆண்டில் அதிகமான மக்கள் இறந்தமையும் இந்த மக்கள் தொகை குறைவதற்கு மற்றொரு காரணம்.

சீனாவில் கடந்த ஆண்டு மாத்திரம் 1.11 கோடி பேர் உயிரிழந்துள்ளனர்.