அமெரிக்காவில் பெரும் தீ விபத்து: 3 எரிபொருள் கொள்கலன் வண்டிகள் எரிந்து நாசம்

OruvanOruvan

A fire accident in America AFP

அமெரிக்காவின் நியூ ஹாம்ப்ஷயர் நகரில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 3 எரிபொருள் கொள்கலன் வண்டிகள் மற்றும் ஒரு உழவு இயந்திரம் எரிந்து அழிந்துள்ளன.

வடக்கு அட்லாண்டிக் ஃப்யூல்ஸ் என்ற இடத்தில் இந்த விபத்து நடந்துள்ளது

எரிபொருள் கொள்கலன் வண்டிகள் தீப்பிடித்து எரிந்ததால் ஆபத்து அதிகரித்ததுடன் பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

பெரிய அளவில் தீ விபத்து ஏற்பட்டதால் பிரதேச மக்கள் அச்சமடைந்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு படையினர் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். இந்த விபத்து சம்பந்தமான காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.