ஐரோப்பிய நாடுகளுக்கு இராணுவ அச்சுறுத்தல்கள் ஏற்படலாம்: ஐரோப்பிய கண்டத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்

OruvanOruvan

German Defense Minister Boris Pistorius

எதிர்வரும் சில ஆண்டுகளில் புதிய இராணுவ ரீதியான அச்சுறுத்தல்கள் ஏற்படலாம் என்பதால் ஐரோப்பிய நாடுகள் தம்மை பாதுகாத்துக்கொள்ள துரிதமான செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் என ஜேர்மனிய பாதுகாப்பு அமைச்சர் போரிஸ் பிஸ்டோரியஸ் தெரிவித்துள்ளார்.

உக்ரேன் மீது தொடர்ந்து தாக்குதல்களை நடத்த நோக்கில் ரஷ்யா ஆயுத தயாரிப்பில் தீவிரம் காட்டி வருகிறது.அத்துடன் ஜோர்ஜியா, மொட்டாவா போன்ற நாடுகளை ரஷ்யா அச்சுறுத்தி வருகிறது.

அமெரிக்காவின் கவனம் இந்தோ-பசிபிக் பிராந்தியத்திதை நோக்கி திரும்பியுள்ளது. இதனால் ஐரோப்பாவில் அமெரிக்கப் படையினரின் எண்ணிக்கை குறையக்கூடும்.

இந்த நிலையில், ஐரோப்பிய கண்டத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்த ஐரோப்பியர்களான நாமே கூடுதல் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். ஆயுதப் படையினர், தொழிற்துறை, சமூகம் ஆகியவற்றின் பின்தங்கிய நிலையில் இருந்து மீண்டு வர சுமார் 8 ஆண்டுகள் வரை செல்லலாம்.

இருப்பினும், ஆயுத உற்பத்தியை அதிகரிக்க ஐரோப்பிய நாடுகளுக்கு மேலதிகமாக காலம் எடுக்கும்.

உக்ரேனுக்கு உதவ வழங்கப்படும் நிதி குறித்து அமெரிக்காவுடன் புதிய உடன்படிக்கையில் கையெழுத்திடாவிட்டால், அந்த நிதியை ஐரோப்பிய நாடுகள் வழங்க வேண்டிய நிலைமையேற்படும்.

ஐரோப்பிய நாடுகளுடன் நட்பு பாராட்டும் அரசாங்கம் போலந்தில் ஆட்சிக்கு வந்துள்ளது. எனவே,ஜேர்மனி, பிரான்ஸ், போலந்து இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்புகள் முன்னேற்றமடையலாம். போலந்துக்கு விரைவில் விஜயம் செய்ய உள்ளேன்.

நேட்டோவின் பாதுகாப்புத் திட்டங்களை மையமாக கொண்டு கிழக்கு எல்லைப் பகுதியில் இராணுவத்தை நிறுத்தி பாதுகாப்பை வலுப்படுத்துவது குறித்து ஆராய வேண்டும்.

இதற்கு முன்னர் ஆப்கானிஸ்தான் மற்றும் மாலி ஆகிய நாடுகளுக்கு ஜேர்மனி அதிகளவிலான இராணுவ வீரர்களை அனுப்பி இருந்தது.

எனினும் தற்போது அவ்வாறு செய்யும் திட்டங்கள் எதுவுமில்லை திட்டமும் இல்லை என பிஸ்டோரியஸ் குறிப்பிட்டுள்ளார்.