ஜெர்மனியில் ரயில் ஓட்டுநர்கள் வேலைநிறுத்தம்: ஜெர்மனியில் ரயில், பிரதான போக்குவரத்து சாதனாமாக இருக்கும் நிலையில் ஓட்டுநர்களின் வேலை நிறுத்தம் பயணிகளுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.

OruvanOruvan

German train drivers go on strike

ஜெர்மனியில் ரயில் ஓட்டுநர்கள் வியாழன் மாலை முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

வியாழன் மாலை 6:00 மணி முதல் சரக்கு ரயில்களின் ஓட்டுநர்களும், இரவு 10:00 மணி முதல் பயணிகள் ரயில்களின் ஓட்டுநர்களும் வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளனர்.

இந்த தொழிற்சங்க நடவடிக்கை வெள்ளிக்கிழமை இரவு 10:00 மணி வரை நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வாரத்தில் ரயில் ஓட்டுநர்கள் முன்னெடுக்கும் இரண்டாது வேலைநிறுத்த போராட்டம் இதுவாகும்.

நவம்பர் நடுப்பகுதியில், ரயில் ஓட்டுநர்கள் 20 மணிநேர வேலைநிறுத்த போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர். இது நாடு முழுவதும் 80 சதவீத நீண்ட தூர ரயில்களை ரத்து செய்ய வழிவகுத்தது.

வேலை நேரத்தை வாரத்திற்கு 38 மணிநேரமாக குறைக்க வேண்டும் என்றும், தற்போதைய சம்பளம் குறைக்கப்படாமல் வேலை நேரம் குறைக்கப்பட வேண்டும் என்பதுவே ரயில் ஓட்டுநர்களின் கோரிக்கையாக இருந்து வருகின்றது.

வேலை நேரத்தைக் குறைப்பதுடன், ஒரு மாதத்திற்கு 555 யூரோ ($600) சம்பள உயர்வையும், அதிகரித்து வரும் பணவீக்கத்தை சமாளிக்க வரி இல்லாத, 3,000 யூரோ போனஸையும் தொழிற்சங்கம் கோரியுள்ளது.

இந்நிலையிலேயே ரயில் ஓட்டுநர்கள் வேலைநிறுத்தத்த போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், ஜெர்மனியில் ரயில், பிரதான போக்குவரத்து சாதனாமாக இருக்கும் நிலையில் ஓட்டுநர்களின் வேலை நிறுத்தம் பயணிகளுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.