Belt and Road திட்டத்தில் இருந்து இத்தாலி வெளியேறியது: சீனாவிற்கு கடும் நெருக்கடி

OruvanOruvan

சீனாவின் இலட்சியமான Belt and Road திட்டத்தில் இருந்து இத்தாலி முறையாக வெளியேறி, ஜனாதிபதி ஜி ஜின்பிங்கிற்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் சீனாவின் Belt and Road திட்டத்தில் இணைந்த ஒரே ஜி7 நாடாக இத்தாலி மாறியது.

இந்நிலையில், நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட முடிவு மூன்று நாட்களுக்கு முன்பு சீனாவிற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக இத்தாலிய செய்தித்தாள் கொரியர் டெல்லா செரா தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டின் தொடக்கத்தில், இத்தாலிய பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி தனிப்பட்ட முறையில் சீனப் பிரதமர் லீ கியாங்கிடம் Belt and Road திட்டத்தில் இருந்து வெளியேற முடிவுசெய்துள்ளதாக குறிப்பிட்டிருந்தார்.

இந்தியாவின் புது டில்லியில் நடைபெற்ற ஜி20 உச்சிமாநாட்டின் போது இருவருக்கும் இடையிலான உரையாடலின் போது இத்தாலிய பிரதமர் தமது நாட்டின் முடிவை வெளிப்படுத்தியிருந்தார்.

சீனாவுடனான Belt and Road திட்டம் "எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யத் தவறிவிட்டது" என்று இத்தாலிய அரசாங்கம் முன்னர் கூறியிருந்தது.

உண்மையில், Belt and Road திட்டத்தில் இணைந்துகொள்வதற்கான முடிவு பல மாதங்களாக கடுமையான ஆய்வுக்கு உட்பட்டது என்றும் அதை "மேம்படுத்தப்பட்ட மற்றும் கொடூரமான செயல்" என்று இத்தாலிய பாதுகாப்பு அமைச்சர் குறிப்பிட்டிருந்தார்.

இத்தாலிய பிரதமர் மெலோனி அவர்களே, இந்த ஒப்பந்தம் ஒரு "பெரிய தவறு" என்று அடிக்கடி கூறியிருக்கிறார். எவ்வாறாயினும், இந்த உடன்படிக்கை 2024 மார்ச்சில் தானாகவே புதுப்பிக்கப்பட இருந்தது.

Belt and Road திட்டத்தில் ஈடுபட்டுள்ள பல நாடுகளைப் போலவே இத்தாலியும் சீனாவுடன் வளர்ந்து வரும் வர்த்தக நெருக்கடியுடன் போராடி வருகிறது.

Belt and Road திட்டம் மூலம் முதலீடுகளை ஈர்க்கவும், சீனாவின் மிகப்பெரிய சந்தையில் ஏற்றுமதி அணுகலை விரிவுபடுத்தவும் இத்தாலி எதிர்பார்த்தது.

இத்தாலி Belt and Road திட்டத்தில் இணைந்ததில் இருந்து, சீனாவுக்கான அதன் ஏற்றுமதிகள் 14.5 பில்லியன் யூரோக்களிலிருந்து 18.5 பில்லியன் யூரோக்களாக அதிகரித்துள்ளன.

அதே சமயம் இத்தாலிக்கான சீன ஏற்றுமதிகள் 33.5 பில்லியன் யூரோக்களிலிருந்து 50.9 பில்லியன் யூரோக்களாக மிகவும் வியத்தகு முறையில் அதிகரித்துள்ளன.

இதன் விளைவாக, சீனாவுடனானவர்த்தக பற்றாக்குறை 2022 வரையிலான மூன்று ஆண்டுகளில் இரட்டிப்பாகியுள்ளது.

இதனிடையே, பல நாடுகளும் சீனாவுடனான தங்கள் கூட்டாண்மையை Belt and Road திட்டமுடன் மறுபரிசீலனை செய்து வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.