வெளிநாடுகளுக்கு படையெடுக்கும் பாகிஸ்தான் நாட்டு யாசகர்கள்; சவூதி, கத்தாரில் பெரும் நெருக்கடி: “யாசகம் எடுத்து சம்பாதிப்பதில் பாதியை தனது பயண ஏற்பாடுகளில் ஈடுபட்டுள்ள முகவர்களுக்கு கொடுக்க வேண்டும்.“

OruvanOruvan

Beggar

பாகிஸ்தானின் வறுமையும் துயரமும் யாருக்கும் மறைக்கப்படவில்லை. தற்போது அங்குள்ள மக்கள் இரண்டு வேளை உணவைக்கூட உட்கொள்வது கடினமாகியுள்ளது.

பாகிஸ்தான் இப்போது யாசகர்களை ஏற்றுமதி செய்யும் நாடாக மாறியதற்கு இதுவே காரணமாக இருக்கலாம்.

பாகிஸ்தானில் உள்ள முல்தான் விமான நிலையத்தில் சவூதி அரேபியா செல்லும் விமானத்தில் இருந்து 16 யாசகர்கள் வெளியேற்றப்பட்ட சம்பவம் அண்மையில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பெடரல் இன்வெஸ்டிகேஷன் ஏஜென்சி (எஃப்ஐஏ) இரண்டு நாட்களுக்கு முன்பு முல்தான் விமான நிலையத்தில் சவூதி அரேபியா செல்லும் விமானத்தில் இருந்து உம்ரா யாத்ரீகர்களாக மாறுவேடமிட்ட 16 யாசகர்களை வெளியேற்றியது.

விமானத்தில் இருந்து இறக்கப்பட்ட குழுவில் ஒரு குழந்தை, 11 பெண்கள் மற்றும் நான்கு ஆண்களும் அடங்குவர் என்று எஃப்ஐஏவை மேற்கோள் காட்டி பாகிஸ்தான் செய்தி ஊடகமான Dawn தெரிவித்துள்ளது.

உம்ரா என்ற பெயரில் விசா

இவர்கள் நாட்டை விட்டு வெளியேறி உம்ரா விசா மூலம் சவூதி அரேபியா செல்ல விரும்பினர். குடியேற்ற நடவடிக்கையின் போது, யாசகம் எடுக்க வெளிநாடு செல்வதாக ஒப்புக்கொண்ட பயணிகளிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

யாசகம் எடுத்து சம்பாதிப்பதில் பாதியை தனது பயண ஏற்பாடுகளில் ஈடுபட்டுள்ள முகவர்களுக்கு கொடுக்க வேண்டும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

உம்ரா விசா காலாவதியான பிறகு அவர் பாகிஸ்தானுக்கு திரும்ப வேண்டியிருந்தது. மேலதிக விசாரணை மற்றும் சட்ட நடவடிக்கைகளுக்காக முல்தானில் இருந்து இந்த பயணிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாசகர்கள் சட்டவிரோதமாக யாசகம் எடுக்க வெளிநாடுகளுக்கு அனுப்பப்படுவதாக வெளிநாட்டு பாகிஸ்தானியர்கள் மற்றும் மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் வெளிப்படுத்தி, ஒரு நாள் கழித்து இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வெளிநாட்டில் கைது செய்யப்பட்ட யாசகர்களில் 90 வீதமானவர்கள் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் என்று அமைச்சின் செயலாளர் செனட் குழுவிடம் தெரிவித்திருந்தார்.

"இந்தக் கைதுகளால் சிறைகளில் சனநெரிசல் அதிகமாக இருப்பதாக ஈராக் மற்றும் சவூதி தூதர்கள் கூறியுள்ளனர்" என்று அவர் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் யாசகர்கள் எப்படி வெளிநாடு செல்கிறார்கள்?

செனட் குழுவிடம் அளித்த அறிக்கையில், சவூதி அரேபியாவில் சுமார் 30 இலட்சம் பாகிஸ்தானியர்களும், ஐக்கிய அரபு எமிரேட்ஸில் 15 இலட்சம் பேரும், கத்தாரில் 2 இலட்சம் பேரும் இருப்பதாக வெளியுறவு அமைச்சக செயலாளர் சுல்பிகர் ஹைதர் தெரிவித்துள்ளார்.

சவூதி அரேபியா, ஈரான் மற்றும் ஈராக் ஆகிய நாடுகளுக்குச் செல்ல ஹஜ் யாத்திரைக்கு வழங்கப்படும் விசாவைப் பெரும்பாலான யாசகர்கள் பயன்படுத்திக் கொள்கின்றனர். அங்கு சென்றதும் யாசகம் எடுக்கத் தொடங்குகிறார்கள்.

பாகிஸ்தானின் ‘தி எக்ஸ்பிரஸ் ட்ரிப்யூன்’ செய்தித்தாள் ஹைதரை மேற்கோள் காட்டி, பாகிஸ்தானை விட்டு ஏராளமான யாசகர்கள் வெளியேறுகிறார்கள் என்று தெரிவித்துள்ளது.

மக்கா மசூதியைத் தவிர, பல மத வழிபாட்டுத் தலங்களில் இருந்தும் ஏராளமான திருடர்கள் பிடிபட்டுள்ளதாகவும் அவர்களில் பெரும்பாலானோர் பாகிஸ்தான் குடிமக்கள் என்றும் ஹைதர் தெரிவித்துள்ளார்.