தாய்லாந்தில் புதிய வகையிலான சிலந்தி வகை கண்டுபிடிப்பு: இந்த இனம் சதுப்புநில காடுகளில் வசிப்பதாக தெரிவிக்கப்படுகிறது
தாய்லாந்தில் Electric blue tarantula இன சிலந்தி வகை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்த சிலந்தி இனம் நீல நிறத்தில் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
தென் தாய்லாந்தில் உள்ள Phang-Nga மாகாணத்தில் உள்ள tarantulas பன்முகத்தன்மை மற்றும் விநியோகம் குறித்த ஆராய்ச்சியின் போது தாய்லாந்து ஆராய்ச்சியாளர்கள் குழுவால் இந்த சிலந்தி இனம் கண்டுபிடிக்கப்பட்டது.
Khon Kaen பல்கலைக்கழகத்தின் பூச்சியியல் மற்றும் தாவர நோயியல் துறையின் ஆராய்ச்சியாளர் Narin Chomphuang,
இந்தச் சோதனையானது மிக அழகான நீலம் மற்றும் ஊதா நிற மின்சாரம் கொண்ட புதிய வகை சிலந்தியின் கண்டுபிடிப்புக்கு வழிவகுத்தது என சுட்டிக்காட்டுகிறார்.
இந்த இனம் சதுப்புநில காடுகளில் வசிப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
இருப்பினும், சதுப்புநில காடுகளின் குறைப்பு மற்றும் பெரும்பாலும் காடுகளின் அழிவு காரணமாக, இந்த Electric blue tarantula இனம் உலகின் அரிதாகி வருவதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.