குவாத்தமாலாவின் தலைநகரில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தில் ஆறு பேர் உயிரிழப்பு : 13 பேரை காணவில்லை: மேலும் பல சடலங்கள் கண்டுபிடிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

OruvanOruvan

Flood houstonchronicle.com

குவாத்தமாலாவின் தலைநகரில் தொடர்ந்து பெய்த அடைமழை காரணமாக ஆற்றின் கரையில் ஏற்பட்ட அனர்த்தத்தில் ஆறு பேர் உயிரிழந்துள்ளனர்.

தொடர்ந்தும் 13 பேரை காணவில்லை என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குவாத்தமாலா நகரின் ஊடாக பாயும் Las Vacas ஆற்றின் கரை உடைந்து பெருக்கெடுத்து ஓடியதில் சுமார் ஆறு வீடுகள் முற்றாக அழிந்ததுடன் அங்கிருந்த மக்கள் உயிராபத்தில் உள்ளனர்.

houstonchronicle.comhoustonchronicle.com

Flood houstonchronicle.com

இது தொடர்பில் கருத்து தெரிவித்த அந்நாட்டின் தீயணைப்புத் துறையின் செயல்பாட்டுத் தலைவர் செர்ஜியோ கபனாஸ்,

"தற்போது நாங்கள் ஆறு உடல்களைக் கண்டுபிடித்துள்ளோம், மேலும் பல சடலங்கள் கண்டுபிடிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

houstonchronicle.comhoustonchronicle.com

Flood houstonchronicle.com

கண்டுபிடிக்கப்பட்ட உடல்களில் ஒரு பெண் மற்றும் ஐந்து பெரியவர்கள் உள்ளனர்.

இதற்கு முன்னர், இந்த மழைக்காலத்தில் குவாத்தமாலாவில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக குறைந்தது 29 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.