இந்தியாவுக்கும் கனடாவுக்கும் இடையில் ராஜதந்திர விரிசலை ஏற்படுத்தியுள்ள காலிஸ்தான்: காலிஸ்தான் என்பது என்ன அது தொடர்பான விபரங்களை அறிய தற்போதைய இளைய தலைமுறையினர் ஆர்வம் காட்ட ஆரம்பித்துள்ளனர்.

OruvanOruvan

Khalistan Protest

கடந்த சில நாட்களாக காலிஸ்தான் என்ற பெயர் உலகமும் பரவலாக விவாதிக்கப்பட்டு வரும் பெயராக மாறியுள்ளது.

காலிஸ்தான் புலிப்படை இயக்கத்தின் தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை சம்பவத்துடன் இந்திய முகவர்களுக்கு தொடர்புள்ளதாக கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சுமத்தினார்.

இந்த நிலைமையானது இந்தியா மற்றும் கனடா இடையிலான உறவில் விரிசலை ஏற்பட்டுள்ளது.

இவ்வாறான சூழ்நிலையில், காலிஸ்தான் என்பது என்ன அது தொடர்பான விபரங்களை அறிய தற்போதைய இளைய தலைமுறையினர் ஆர்வம் காட்ட ஆரம்பித்துள்ளனர். அவர்கள் கூகுள் தேடுத்தளத்தின் உதவியுடன் தகவல் திரட்டி வருகின்றனர்.

இந்தியாவில் காலிஸ்தான் பிரிவினைவாத இயக்கங்களின் வேர்கள் நீண்ட காலமாக மறைந்துவிட்டன.

ஆனால் அதன் பின்னர் இந்தியாவில் இருந்து புலம்பெயர்ந்த சீக்கியர்கள் சிலர் வெளிநாடுகளில் காலிஸ்தான் என்ற பெயரில் பல இயக்கங்களை உருவாக்கி வருகின்றனர்.

அந்த இயக்கங்கள் இந்தியாவுக்கு எதிரான பரப்புரைகளை தொடர்ந்தும் மேற்கொண்டு வருகின்றனர். பஞ்சாபை இந்தியாவில் இருந்து பிரித்து தனிநாடாக உருவாக்கும் இயக்கத்திற்கு காலிஸ்தான் இயக்கம் என பெயரிட்டனர்.

OruvanOruvan

Canadian PM Justin Trudeau and Indian PM Modi

காலிஸ்தான் என்பது காலிஸ் என்ற அரபு சொல்லில் இருந்து உருவானது. காலிஸ்தான் என்றால் கல்சாவின் நிலம். சீக்கியர்கள் மட்டுமே வாழும் இடம் என்று பொருள்.

லாகூர் பிரகடனத்திற்கு பதிலளிக்கும் விதமாக கடந்த 1940 ஆண்டு டொக்டர் வீர் சிங் பாட்டி ஒரு துண்டுப்பிரசுரத்தை வெளியிட்டபோது இந்த வார்த்தை முதன்முதலில் பயன்படுத்தப்பட்டது.

சீக்கியர்களுக்கான தனி நாடு கோரிக்கையானது 1929 ஆம் ஆண்டில் முன்வைக்கப்பட்டது. மாஸ்டர் தாரா சிங் என்பவர் இந்திய தேசிய காங்கிரஸ் கூட்டத்தில் முதன் முறையாக இந்த கோரிக்கையை முன்வைத்தார்.

1970 ஆம் ஆண்டுகளில் சரண் சிங் பங்க்ஷி மற்றும் டொக்டர் ஜெகதீத் சிங் சவுகான் தலைமையில் காலிஸ்தான் தனிநாடு கோரிக்கை வலுவடைந்தது.

இதன் பின்னர் 1980 ஆம் காலிஸ்தான் தேசிய பேரவைஉருவாக்கப்பட்டது. இதன் பின்னர் பஞ்சாப் இளைஞர்கள் சிலர் தால் கல்சா என்ற அமைப்பை ஆரம்பித்தனர். இந்திய அரசுக்கு எதிரான ஆயுதப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

இந்த நிலைமையில் இந்திரா காந்தி இந்திய பிரதமராக பதவி வகித்த கடந்த 1984 ஆம் ஆண்டு காலிஸ்தான் பிரிவினைவாதிகளை ஒழிப்பதற்காக அமிர்தசரஸில் உள்ள பொற்கோவிலில் ஒபரேஷன் புளூ ஸ்டார் என்ற இராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

சீக்கியர்களின் புனித தளமாக பொற்கோயில் மீது மேற்கொள்ளப்பட்ட இந்த இராணுவ நடவடிக்கைக்கு பழிவாங்கும் நடவடிக்கையாக பிரதமர் இந்திரா காந்தி, அவரது மெய்பாதுகாவலர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

இந்திரா காந்தி கொலை செய்யப்பட்டதை இந்தியாவின் குறிப்பாக டெல்லியில் சீக்கியர்களுக்கு எதிரான இன வன்முறைகள் ஏற்பட்டதுடன் நூற்றுக்காண சீக்கியர்கள் கொல்லப்பட்டதுடன் அவர்களது சொத்துக்கள் அழிக்கப்பட்டன.

இந்த சம்பவங்களுக்கு பின்னர் காலிஸ்தான் இயக்கங்களின் வேர்கள் இந்தியாவிலிருந்து விலகிச் சென்றன.

OruvanOruvan

Sikhs protest in Canada

இவ்வாறான சூழ்நிலையில், தற்போது அமெரிக்கா, கனடா, பிரிட்டன் உட்பட பல நாடுகளில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் இந்தியாவுக்கு எதிராக அடிக்கடி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

கனடாவிலேயே காலிஸ்தான் இயக்கங்கள் தீவிரமாக செயற்பட்டு வருகின்றன.ஹர்தீப் சிங் நிஜ்ஜார் இதற்கு பிரதான காரணம் என கூறப்பட்டது. இந்த நிலையிலேயே அவர் வான்கூவரில் உள்ள குருத்துவாரா ஒன்றில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டார்.

இந்த கொலையின் பின்னணியில் இந்திய புலனாய்வு அமைப்புகள் இருப்பதாக கனடா குற்றம் சுமத்தியுள்ளார். தமது நாட்டில் தஞ்சமடைந்து பிரஜையாக மாறியுள்ள ஒருவர் வேறு ஒரு நாட்டின் தலையீட்டில் கொலை செய்யப்படுவது அந்த நாட்டின் இறையாண்மையை மீறும் என செயல் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

உதாரணமாக இந்தியாவின் தஞ்சமடைந்துள்ள திபேத் ஆன்மீக தலைவர் தலாய் லாமா உட்பட சீனாவுக்கு எதிரான திபேத்திய பிரிவினைவாத தலைவர்கள் இந்தியாவுக்குள் வைத்து சீனா ஆதரவுடன் கொல்லப்பட்டால், அது இந்தியாவின் இறையாண்மைக்கு பெரும் அச்சுறுத்தலாக அமையலாம்.

இந்த நிலைமையே தற்போது கனடாவுக்கு ஏற்பட்டுள்ளது.