விமர்சனங்களை புறந்தள்ளிவிட்டு மனைவி கமீலாவுடன் குதிரை பந்தயத்தில் கலந்து கொண்ட மன்னர் சார்லஸ்: மறைந்த இரண்டாம் எலிசபெத் மகாராணியால் குறித்த குதிரை வளர்க்கப்பட்டது.

OruvanOruvan

King Charles and Queen camilla

குதிரை பந்தயத்தில் பிரித்தானிய மன்னர் சார்லஸின் குதிரையான டெசர்ட் ஹீரோ மூன்றாவது இடத்தைப் பிடித்தது.

பிபிசி வெளியிட்ட தகவலின்படி, மன்னர் மற்றும் ராணிக்கு சொந்தமான டெசர்ட் ஹீரோ, தம்பதியினர் பார்வையிட்ட பந்தயத்தில் மூன்றாம் இடத்தை பிடித்ததாக கூறப்பட்டுள்ளது.

மறைந்த இரண்டாம் எலிசபெத் மகாராணியால் குறித்த குதிரை வளர்க்கப்பட்டது.

குதிரை பந்தயங்களில் பங்கேற்றதற்காக மன்னர் சார்லஸ் மற்றும் அவரது மனைவியை விலங்குகள் உரிமைக் குழுக்கள் விமர்சிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படியா சூழலில் அதை புறந்தள்ளிவிட்டு இருவரும் நிகழ்வில் பங்கேற்றனர்.

பந்தயத்தில் வெற்றி பெற்ற குதிரையை ஓட்டிய ஜோக்கியான பிராங்கி டிட்டோரி என்பவருடனுடன் மன்னர் உரையாற்றினார்.