ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தில் 3 பில்லியன் திர்ஹாம் பெறுமதியான போதைப்பொருள் கடத்தல் முயற்சி முறியடிப்பு: ஐந்து கொள்கலன்களில் அடைக்கப்பட்ட 13 தொன்னுக்கும் அதிகளவான போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தில் பெருந்தொகையான போதைப்பொருள் கடத்தல் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தின் உள்விவகார அமைச்சர் ஷேக் சைஃப் பின் சயீத் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.
இதன்படி, ஐந்து கொள்கலன்களில் அடைக்கப்பட்ட 13 தொன்னுக்கும் அதிகளவான போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
இவ்வாறு கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் பெறுமதி 3 பில்லியன் திர்ஹாம் என மதிப்பிடப்பட்டுள்ளதாக ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தின் உள்விவகார அமைச்சர் ஷேக் சைஃப் பின் சயீத் தெரிவித்துள்ளார்.
651 கதவுகள் மற்றும் 432 அலங்கார பொருட்களில் வைத்து குறித்த தொகை போதைப்பொருளை கடத்துவதற்கு முயற்சித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சம்பவத்துடன் தொடர்புடைய ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.