நாடுகள் கடந்து பல துறையில் சாதிக்கும் பிரித்தானியாவில் வசிக்கும் இலங்கை தமிழ்ப்பெண்: நாட்டியக் கலையை அனைவருக்கும் சேர்க்க முயற்சி செய்து கொண்டிருக்கிறேன் - ஜெயந்தி யோகராஜா

OruvanOruvan

Jayanthi Yogaraja

இலங்கையில் பிறந்து பிரித்தானியாவில் வசிப்பவர் முனைவர் ஜெயந்தி யோகராஜா.

நடன ஆசிரியர், நுண்கலைப் பேராசிரியர், இசைக்கருவிகளை திறம்பட வாசிப்பவர் என பன்முகத்தன்மை கொண்டவர் ஆவார்.

நெதர்லாந்து, ஜேர்மனியில் உள்ள பள்ளிகளில் நாட்டிய ஆசிரியராக பணியாற்றியுள்ள அவர் பிரித்தானியாவில் உள்ள சலங்கை நர்த்தனாலயா அகாடமியின் இயக்குநராகவும், கிரிபின் கல்லூரி நடனத்துறை தலைவராகவும் உள்ளார்.

அவர் இந்திய பத்திரிக்கைக்கு அளித்த ஒரு பேட்டியில், ”எனது லண்டன் நாட்டியப் பள்ளியில் பல நாட்டு மாணவர்களும் கற்கிறார்கள். மனநலம் குன்றிய மாணவர்களுக்கும் கற்பித்தேன்.

நெதர்லாந்து, ஜெர்மனி ஆகிய நாடுகளிலும் நாட்டியப்பள்ளி நடத்தி வருகிறேன்.

பல நிகழ்ச்சிகளின் மூலம் நாட்டியக் கலையை அனைவருக்கும் சேர்க்க முயற்சி செய்து கொண்டிருக்கிறேன்" என கூறியுள்ளார்.