லண்டனில் ஒவ்வொரு 6 நிமிடங்களுக்கு ஒரு செல்போன் திருடப்படுகிறது! வெளியான முக்கிய தகவல்: 2022 ஆம் ஆண்டில் 90,864 கைபேசிகள் லண்டனில் திருடப்பட்டுள்ளன.

OruvanOruvan

Mobile Theft Photo Credit: ipleaders

லண்டனில் ஒவ்வொரு 6 நிமிடங்களுக்கு ஒரு செல்போன் திருடு போவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

இது தனிப்பட்ட சுய தகவல்கள், நிதி இழப்பு மற்றும் பொது பாதுகாப்பு பற்றி கடும் கவலைகளை ஏற்படுத்துகிறது.

கடந்த ஆண்டு லண்டனில் ஒவ்வொரு 6 நிமிடத்திற்கும் ஒரு மொபைல் போன் திருடப்பட்டது என்று காவல்துறையின் தரவுகள் தெரிவிக்கின்றன.

2022 ஆம் ஆண்டில், 90,864 கைபேசிகள் திருடப்பட்டுள்ளன, சராசரியாக தினமும் 250 க்கும் அதிகமானவை திருடு போனதாக பெருநகர காவல்துறை தெரிவித்துள்ளது.

Photo Credit: kasperskyPhoto Credit: kaspersky

Mobile Theft Photo Credit: kaspersky

பிபிசியின் தகவலின்படி, திருட்டைத் தடுப்பதற்கான வழிமுறைகள் ஏற்கனவே நடைமுறையில் உள்ளதாக UK நெட்வொர்க்குகளைப் ஒழுங்குப்படுத்தும் மொபைல் UK தெரிவித்துள்ளது.

இளைஞர்கள், குறிப்பாக 14 முதல் 20 வயதுடையவர்கள் கொள்ளைச் சம்பவங்களில் செல்போன்களை இழந்துள்ளனர், அதே சமயம் இதே வயதுடையவர்கள் செல்போன் திருட்டு சம்பவங்களில் சம்மந்தப்பட்டுள்ளனர் என காவல்துறையின் தரவுகள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையில், இந்த ஆண்டு ஜனவரியில் மாத்திரம் போன்கள் திருடப்பட்ட சம்பவங்கள் குறித்து கிட்டத்தட்ட 8,500 புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

கொள்ளையிடப்பட்ட செல்போன்களில் 119 போன்கள் மீட்கப்பட்டு உரிமையாளர்களிடம் வழங்கப்பட்டுள்ளன.