பிலிப்பைன்ஸில் படகு கவிழ்ந்து விபத்து: 30 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்திருப்பதாகவும், இதுவரையில் 40 பேரை மீட்டிருப்பதாகவும் அங்கிருந்து கிடைக்கபெறும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலா அருகே லகுனா ஏரியில் படகொன்று விபத்துக்குள்ளாகியுள்ளது
இன்று அதிகாலை வேளையில் 70 பயணிகளை ஏற்றிச்சென்ற படகே இவ்வாறு விபத்துக்குள்ளானதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
குறித்த படகு தலைநகர் மணிலா தலிம் தீவுக்கு பயணித்துக்கொண்டிருந்த வேளையில், திடீரென ஏற்பட்ட பலத்த காற்றின் காரணமாக விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு குழுவினர், மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.
இதன்போது 30 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்திருப்பதாகவும், இதுவரையில் 40 பேரை மீட்டிருப்பதாகவும் அங்கிருந்து கிடைக்கபெறும் தகவல்கள் தெரிவிக்கின்றன.