கனேடிய அமைச்சரவையில் இருந்து தமிழ் வம்சாவளி பெண் அனிதா ஆனந்த் நீக்கம்: பதிலாக மிகப்பெரிய பொறுப்பு: கனேடிய திறைசேரியின் தலைவர் பொறுப்பை ஏற்றுக்கொள்வதில் நான் மகிழ்ச்சியடைகிறேன் - அனிதா ஆனந்த்

OruvanOruvan

Anita Anand Photo Credit: Twitter

கனடாவில் கடந்த 2021ஆம் ஆண்டு நடைபெற்ற பொது தேர்தலில் லிபரல் கட்சி வெற்றி பெற்றதையடுத்து அக்கட்சி சார்பில் oakville தொகுதியில் போட்டியிட்ட அனிதா ஆனந்த் வெற்றி பெற்றார்.

இதனையடுத்து பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அனிதாவை நாட்டின் பாதுகாப்பு அமைச்சராக நியமித்தார்.

அனிதாவின் தந்தை தமிழகத்தை சேர்ந்தவர், தாயார் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர்.

அதன்படி தமிழ் வம்சாவளி பெண்ணான அனிதா ஆனந்த் ஒன்றரை ஆண்டுகளாக தனது பணியை சிறப்பாக மேற்கொண்டார்.

இந்த சூழலில் தான் கனேடிய அமைச்சரவையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.

அதில் ஒரு பகுதியாக அனிதா ஆனந்த் அமைச்சர் பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

இதனை தொடர்ந்து கனேடிய திறைசேரியின் தலைவராக அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த பொறுப்பு நிதித்துறை சம்மந்தப்பட்ட மிகப்பெரிய பதவியாகும்.

பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ முன்னிலையில் அனிதா பதவியேற்று கொண்டார்.

இது தொடர்பாக ட்விட்டரில் அனிதா வெளியிட்டுள்ள பதிவில், கனேடிய திறைசேரியின் தலைவர் பொறுப்பை ஏற்றுக்கொள்வதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.

எங்கள் அரசாங்கத்தின் பொருளாதாரக் குழுவில் ஒரு அங்கமாக இருப்பது ஒரு மரியாதை என தெரிவித்துள்ளார்.