வீட்டில் திருடுபோவதாக கனவு! தூக்கத்தில் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டுக்கொண்ட நபர்: விசாரணையில் திருட்டு சம்பவம் ஏதும் நடைபெறவில்லை என தெரியவந்துள்ளது.
அமெரிக்காவில் நபர் ஒருவர் வீட்டிற்கு திருடன் வருவது போல கனவு கண்டு தன்னை தானே துப்பாக்கியால் சுட்டு கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இலியானிஸ் மாகாணத்தை சேர்ந்தவர் 62 வயதான மார்க் எம் டிகாரா.
இவரது காலில் துப்பாக்கி குண்டு பாய்ந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக வந்த நிலையில், இது குறித்து விசாரித்த போது அவர் தெரிவித்த பதில் ஆதிர்ச்சியை கொடுத்தது.
அண்மையில் மார்க் தனது வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த போது இவருக்கு கனவு வந்துள்ளது.
அதில் தனது வீட்டில் திருடர்கள் நுழைந்து களவாடுவது போல கனவு கண்டுள்ளார். தூக்கத்திலேயே திருடர்களை தாக்குவதாக எண்ணி தன்னிடம் இருந்த துப்பாக்கியை எடுத்து தனது காலிலேயே சுட்டுக்கொண்டுள்ளார்.
குண்டு பாய்ந்து காலில் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில், வலியில் மார்க் திடுக்கிட்டு விழித்துள்ளார்.
காலில் குண்டு பாய்ந்து ரத்தம் வழிந்துதோடிய நிலையில் மருத்துவமனையில் சேர்ந்துள்ளார்.
இதற்குள்ளாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
அதில் தான் உண்மை வெளியாகியுள்ளது, மேலும் விசாரணையில் திருட்டு சம்பவம் ஏதும் நடைபெறவில்லை என தெரியவந்துள்ளது.
மேலும் அனுமதி பத்திரம் இல்லாமல் துப்பாக்கி வைத்திருந்ததாக மார்க் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார்.
பின்னர் $150,000 பிணையில் விடுவிக்கப்பட்ட மார்க் வரும் 29ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளார்.