80 மச்சங்களுடன் பிறந்துள்ள அபூர்வ குழந்தை - புகைப்படங்கள்: 80 மச்சங்களுடன் பிறந்த குழந்தையின் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி உள்ளது.

OruvanOruvan

Rare baby born with 80 moles

பிறக்கும் போதே உடல் முழுவதும் கருமையான 80 மச்சங்களுடன் பிறந்த குழந்தையின் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி உள்ளது.

ஆர்மீனியாவின் யெரெவன் நகரைச் சேர்ந்த மரியம் பெட்ரோசியன் (26) மற்றும் டேரன் பெட்ரோசியன் (28) தம்பதியினருக்கு பிறந்த ஆண் குழந்தையே இவ்வாறு மச்சங்களுடன் பிறந்துள்ளது.

மேலும், இந்த ஆண் குழந்தை பார்ப்பதற்கு விசித்திரமாக இருப்பதால், “உங்களுக்கு விருப்பம் இல்லாவிட்டால் வைத்தியசாலையில் இந்த குழந்தையை விட்டு விடுமாறு வைத்தியர்கள் கூறியுள்ளனர்.

ஆனால், பெற்றோர்கள் அதை மறுத்ததுடன் குநந்தைக்கு ஏற்பட்டுள்ள குறைபாட்டை சரி செய்து தாமே வளர்த்து கொள்வதாக கூறி குழந்தையை எடுத்துச் சென்றுள்ளனர்.

குறித்த ஆண் குழந்தை, ஸ்பைனா பிஃபிடா என்ற குறைபாடு காரணமாகவே இவ்வாறு பிறந்துள்ளதாகவும் இதற்கு முன்னர் இவ்வாறான சந்தர்ப்பத்தை தாம் பார்த்ததில்லை எனவும் வைத்தியர்கள் வைத்திய பரிசோதனையின் பின் குறிப்பிட்டனர்.

குழந்தைக்கு காணப்பட்ட சிறு குறைபாடு காரணமாக சிறிய அறுவை சிகிச்சையும் செய்யவேண்டியிருந்தது.

இதனால், முதுகெலும்பை சரி செய்ய 90 நிமிட அறுவை சிகிச்சைக்கு அவர்கள் குழந்தையை அழைத்துச் சென்றனர். பின், குழந்தை மீண்டும் சரியாகிவருவதற்கு 5 நாட்கள் எடுத்தது.

குறித்த தம்பதிக்கு ஏற்கனவே இரு சகோதரர்கள் இருக்கும் நிலையில், தற்போது மூன்றாவதாக பிறந்துள்ள இந்த குழந்தையையும் சகோதரர்கள் சாதாரண மனநிலையோடு ஏறறுக்கொண்டதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், இந்த குழந்தைக்கு ஆர்டொம்ஸ் (Artyom’s) என பெயரிட்டுள்ளனர். ஆர்டொம்ஸை அனைவரும் வியப்பாக பார்த்தாலும் எங்களுக்கு இவன் ஆசிர்வதிக்கப்பட்ட குழந்தை என அவரது தாய் குறிப்பிடுகின்றார்.

Image 1Image 1Image 2Image 2Image 3Image 3Image 4Image 4Image 5Image 5