தூக்கமின்மையால் பாதிக்கப்பட்டுள்ள வடகொரிய ஜனாதிபதி: மது மற்றும் புகைபிடிக்கும் பழக்கம் அவரது இந்த நிலைமைக்கு காரணமாக இருக்கலாம் எனவும் சர்வதேச ஊடகங்கள் கூறியுள்ளன.

OruvanOruvan

North Korean President Kim Jong Un Photo Credit: Bloomburg

வடகொரிய ஜனாதிபதி கிம் ஜோங் உன்னின் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தூக்கமின்மை நோயினால் அவதிப்படுவதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மது மற்றும் புகைபிடிக்கும் பழக்கம் அவரது இந்த நிலைமைக்கு காரணமாக இருக்கலாம் எனவும் சர்வதேச ஊடகங்கள் கூறியுள்ளன.

வட கொரிய அதிகாரிகள் தூக்கமின்மை தொடர்பான வெளிநாட்டு மருத்துவ தகவல்களை, குறிப்பாக சோல்பிடெம் போன்ற மருந்துகளைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர் என தென் கொரியாவின் தேசிய புலனாய்வு சேவையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறிக்கையின்விபரங்களை தென் கொரிய நாடாளுமன்ற புலனாய்வுக் குழுவின் செயலாளர் யோ சாங்-பம் ஊடகங்களுக்கு வழங்கியுள்ளார்.

தூக்கமின்மை வடகொரியாவை ஆட்டிப்படைக்கிறது. அந்த பிரச்சினையில் அங்குள்ள பெரிய தலைவரும் தவிப்பதாக எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது.

மேலும், அதன் சிகிச்சை மற்றும் மருந்து விபரங்கள் குறித்தும் அங்குள்ள அதிகாரிகள் வெளிநாட்டு மருத்துவ முறைகள் குறித்தும் விசாரித்து வருவதாகவும் தெரியவந்துள்ளது.

இதனிடையே அண்மையில் வெளியான கிம் ஜோங் உன்னின் சில புகைப்படங்களை செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் ஆய்வு செய்துள்ளோம்.

அவர் மீண்டும் உடல் எடையை அதிகரித்திருப்பது தெளிவாகத் தெரிகிறது. இவை தவிர மார்ல்பரோ, டன்ஹில் போன்ற வெளிநாட்டு சிகரெட்டுகள் மற்றும் மதுவுடன் சேர்த்து சாப்பிடும் தின்பண்டங்களை வடகொரியா அதிகளவில் இறக்குமதி செய்து வருவதாக தெரியவந்துள்ளது.

அதிகளவான மது மற்றும் புகைப்பழக்கத்தால் கிம்மின் உடல்நிலை மோசமடைந்து வருவதாக தெரிகிறது. அவரது எடை சுமார் 140 கிலோ கிராம் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனை தவிர தூக்கமின்மை அவரைத் தொந்தரவு செய்கிறது என்பது தெளிவாகிறது.

கடந்த மே 16 ஆம் திகதி, அவர் ஒரு நிகழ்ச்சிக்கு சென்றிருந்த போது, ​​​​அவர் கண்களுக்குக் கீழே கறுவலையங்கள் தெளிவாகத் தெரிந்தன. மேலும், அவருக்காக சோல்பிடெம் போன்ற மருந்துகளும் சேகரிக்கப்பட்டு வருவதாகவும் யோ சாங்-பம் கூறியுள்ளார்.

இதனிடையே வடகொரியாவில் நிலவும் உணவுப் பற்றாக்குறையால் உணவு தானியங்களின் விலை கடுமையாக அதிகரித்துள்ளன.

கிம் ஆட்சிக்கு வந்த பின்னர் நிலைமை மோசமாகி வருவதாக தென்கொரிய தேசிய புலனாய்வு சேவையின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மக்களின் பட்னியை பொருட்படுத்தாமல் கிம் குடும்பம் ஆடம்பரங்களையும், உயர்தர விருந்துகளையும் நடத்தி வருவதாகவும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.