மறைந்த பிரித்தானிய இளவரசி டயானாவுக்கு பிடித்த உணவு என்ன? இறுதிவரை விரும்பி சுவைத்தது: வீட்டில் தயாரிக்கப்பட்ட காய்கறி சாறுகளைப் பருகுவதை டயானா விரும்புவார்.

OruvanOruvan

Princess Diana Photo Credit: Anwar Hussein/Getty Images

பிரித்தானிய இளவரசி டயானா உயிரிழந்து 25 ஆண்டுகளை கடந்துவிட்ட போதிலும் அவரின் நினைவுகளை மக்கள் மறக்கவில்லை.

அப்படி டயானா வாழும் வரையில் அவர் விரும்பி சாப்பிட்ட உணவுகள் குறித்த சில சுவாரசிய தகவல்கள் வெளியாகியுள்ளது.

டயானாவின் சமையல் அறையில் பணிபுரிந்த பிரபல சமையல் கலைஞர் டேரன் மெக்கிராடி இது தொடர்பான தகவல்களை வெளியிட்டுள்ளார்.

Eggs suzette

முட்டை உணவான இதில் உருளைக்கிழங்கும் சேர்க்கப்படுகிறது, இது டெசர்ட் வகை உணவு கிடையாது, சாஸ் சேர்க்கப்பட்டு இந்த உணவு பரிமாறப்படுகிறது.

veggie juices (காய்கறி சாறு)

வீட்டில் தயாரிக்கப்பட்ட காய்கறி சாறுகளைப் பருகுவதன் மூலம் ஆரோக்கியமான உணவு பழக்கத்தை டயானா பின்பற்றியுள்ளார்.

லிச்சி பழம்

லிச்சி பழத்தை டயானா விரும்பி உண்பார். இது பார்ப்பதற்கு பிங்க் நிறத்தில் இருக்கும்.

இதில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இதை இளவரசி டயானா அடிக்கடி சாப்பிடுவார்.

பீட்சா

டா மரியாவில் தயாரிக்கப்படும் பிட்சாவை டயானா விரும்பி சாப்பிடுவார்.

இது கென்சிங்டன் அரண்மனையிலேயே அமைந்துள்ள கடையாகும்.