பிரித்தானியாவின் புதிய துணை பிரதமர் யார்? அறிவித்தது ரிஷி சுனக்கின் அரசு: தனது பதவியை டொமினிக் ராஜினாமா செய்தார்.
பிரித்தானியாவின் புதிய துணை பிரதமராக ஆலிவர் டவுடனை ரிஷி சுனக் நியமித்துள்ளார்.
நாட்டின் துணை பிரதமராக இருந்த டொமினிக் ராப், தனது துறை சார்ந்த அதிகாரிகளிடம் மரியாதை குறைவாகவும், அவர்களை துன்புறுத்தும் வகையிலும் நடந்து கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த நிலையில் தனது பதவியை டொமினிக் ராஜினாமா செய்தார்.
இதைத் தொடர்ந்து, பிரித்தானியாவின் புதிய துணை பிரதமராக, ஆலிவர் டவுடன் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
டவுடன் தற்போது சுனக் அரசாங்கத்தில் அமைச்சரவை அலுவலக மந்திரியாக பணியாற்றுவது குறிப்பிடத்தக்கது.