23 செயற்கை கோள்களை ஏவிய ஸ்பேஸ் எக்ஸ்: அதிவேக ப்ரேட்பேண்ட் இணையம் வழங்கப்படும்

OruvanOruvan

23 starling satellite

விண்வெளி ஆராய்ச்சியில் உலக நாடுகளிடம் எப்பொழுதுமே ஒரு போட்டி நிலவும். அதனடிப்படையில் அமெரிக்காவின் ஸ்பேஸ் எக்ஸ் எனும் தனியார் விண்வெளி ஆய்வு நிறுவனமும் இந்த போட்டியில் இணைந்து, ஒரே நேரத்தில் 23 ஸ்டார் லிங்க் செயற்கைகோள்களை விண்ணுக்கு அனுப்பியுள்ளது.

இவை வெற்றிகரமாக அதன் சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டுள்ளன.

இந்த செயற்றிட்டத்துக்காக புளோரிடாவின் கேப் கனாவெர் விண்வெளி ஏவுதளத்தில் இருந்து பால்கன் - 9 ராக்கெட் ஏவப்பட்டது.

விண்வெளியில் ஏவப்பட்ட இந்த செயற்கை கோள்களாவன, அதிவேக பிராட்பேண்ட் இணையத்தை வழங்கும் என ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

OruvanOruvan

23 starling satellite