உங்க போனில் சத்தம் வரலயா?: இத பாலோ பண்ணுங்க

OruvanOruvan

Mobile phone sound

இன்றைய காலகட்டத்தில் ஸ்மார்ட்போன்களின் பாவனை அதிகரித்துள்ள நிலையில் சில சமயங்களில் ஆண்ட்ராய்ட் போன்களின் சத்தம் மிகவும் குறைவாகவே கேட்கும்.

இது அவசரமான நேரங்களில் பெரும் பிரச்சினையாக மாறிவிடுகிறது.

இந்தப் பிரச்சினையிலிருந்து விடுபட பயனர்கள் சில விடயங்களை கடைபிடிக்க வேண்டும்.

அதில் பயனர்கள் முதலில் தங்களது கையடக்கத் தொலைபேசியின் செட்டிங் ஆப்ஷனுக்குச் சென்று, அதில் sound and vibration என்ற ஆப்ஷன் இருக்கும். இதற்குள் sound quality என்ற ஆப்ஷனை பெறுவார்கள். இதனை நாம் ஆட்டோ மோடில் அமைக்க வேண்டும்.

இதனைத்தொடர்ந்து கீழே உள்ள Adapt sound ஆப்ஷனை பார்த்து அதனை ஆஃப் செய்ய வேண்டும். பின்னர் பயனர்கள் அந்த விருப்பதை்தை 'over 60 years old' என்று அமைக்க வேண்டும். இதனால் பயனர்கள் தங்களது இயர்போன்களில் அதிக பாஸ் ஒலியைப் பெற முடியும்.