ஒன்லைன் டேட்டிங் அப் யூஸ் பண்றீங்களா?: அப்போ இந்த ட்ரிக்ஸ் பாலோ பண்ணுங்க

OruvanOruvan

Online dating apps

இவ்வுலகில் அனைத்துமே டிஜிட்டல் மயமான நிலையில் வாழ்க்கை துணையை தெரிவு செய்வதற்கான டேட்டிங் அப்களும் அதிகரித்துவிட்டன.

அந்த வகையில் டேட்டிங் ஆப்களைப் பயன்படுத்தும்போது நமது பாதுகாப்பை உறுதி செய்ய என்னென்ன நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் எனப் பார்ப்போம்.

தனி நபர் விபரங்களைப் பதுகாக்கவும்

முதலில் நீங்கள் பேசும் நபர் நம்பகத்தன்மை உடையவரா என்பதைத் தெரிந்துகொண்டதன் பின்னர் உங்களது பெயர், முகவரி, பணியிடம் போன்றவற்றை வெளிப்படுத்துங்கள்.

OruvanOruvan

Online dating apps

ப்ரொபைல் புகைப்படங்கள்

ஏனைய சமூக வலைத்தளங்களில் பயன்படுத்தி புகைப்படங்களை டேட்டிங் அப் முகப்பில் பயன்படுத்த வேண்டாம்.

பேசும்பொழுது எச்சரிக்கையாக இருக்கவும்

நீங்கள் உபயோகிக்கும் டேட்டிங் அப்பின் மெசேஜிங் சிஸ்டத்தை பயன்படுத்தி முதலில் பேசவும். அந்த நபர் வேறு ப்ளாட்ஃபோர்ம்களை பயன்படுத்தும்படி உங்களை வற்புறுத்தினால் எச்சரிக்கையாக இருக்கவும்.

பாதுகாப்பான லொகேஷன்

நீங்கள் டேட் செய்யும் நபரை நேரில் சந்திக்கும்பொழுது கெஃபே, ரெஸ்டாரண்ட், பார்க் போன்ற பொது இடங்களை தெரிவு செய்யுங்கள். இது உங்களுக்கு பாதுகாப்பை கொடுப்பதோடு உங்களுக்கு நம்பகமான ஒருவரிடம் நீங்கள் செல்லும் இடம் மற்றும் உடன் செல்லும் நபரின் விபரங்களை கூறுங்கள்.

OruvanOruvan

Online dating apps