தொலைபேசி ஹேக் செய்யப்பட்டுள்ளதை எவ்வாறு அறியலாம்?: அதற்கான வழிகள் இதோ

OruvanOruvan

How to identified hacked phone

ஹேக்கிங் ஹேக்கிங் என்று சொல்லப்படுகிறது. ஆனால், உண்மையில் ஒரு கையடக்கத் தொலைபேசி ஹேக் செய்யப்பட்டதற்கான அறிகுறிகள் இவைதான் என பலருக்கும் தெரியாது. ஒரு கையடக்கத் தொலைபேசி ஹேக் செய்யப்பட்டால் பின்வரும் அறிகுறிகள் இருக்கும்.

தொலைபேசி சூடாகுதல் - படம் பார்க்காமல் அல்லது கேம் விளையாடாமலேயே உங்கள் கையடக்கத் தொலைபேசி வழக்கத்துக்கு மாறாக சூடாகும்.

தொலைபேசியின் பேட்டரி குறைதல் - உங்கள் கையடக்கத் தொலைபேசியின் பேட்டரி வேகமாக குறைந்தால் உங்கள் தொலைபேசியிலுள்ள தகவல்களைத் திருடுவதற்கான வேலை அரங்கேறுகிறது என்ற அர்த்தம்.

ஸ்விட்ச் ஒன் - கையடக்கத் தொலைபேசி அடிக்கடி ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டால் உங்கள் மொபைலில் ஸ்பைவேர் இருக்கலாம்.

தேவையற்ற அப்கள் - நீங்கள் டவுன்லோட் செய்யாத சில அப்கள் உங்கள் தொலைபேசியில் இருந்தால் உடனே நீக்கிவிடவும். அதுவே உங்கள் தகவல்களை திருடுவதற்கான வழியாக இருக்கலாம்.

கேலரிகள் - உங்கள் கேலரியில் நீங்கள் எடுக்காத அல்லது இதுவரையில் அடையாளம் காணாத புகைப்படங்கள் இருந்தால் அவற்றை சீரியஸாக எடுத்துக்கொள்ளவும். அதை உடனடியாக அழிக்கவும்.