Firefox Browser பயன்படுத்துபவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை: உங்கள் தகவல்கள் திருடப்படலாம்

OruvanOruvan

Firefox browser

Firefox ப்ரவுசர் பயனர்களுக்கு ஒரு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த Firefox ப்ரவுசரில் சில குறைபாடுகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

அதில் இந்த ப்ரவுசரை நாம் பயன்படுத்தும்போது, ஹேக்கர்கள் நமது கணினியை கட்டுப்படுத்துவதற்கான வாய்ப்புக்கள் அதிகம் உள்ளதாக கூறப்படுகிறது.

இந்தக் குறைபாடுகளினால் ஒரு பயனரை போலி இணையத்தளத்துக்கு அழைத்துச் செல்வதுடன் அவர்களது தகவல்களையும் பொறி வைத்து திருடுகின்றனர்.

இதனால் உங்களது தனிப்பட்ட தகவல்கள் அனைத்தும் ஹேக்கர்கள் வசம் சென்றுவிடும்.

இந்த பிரச்சினையிலிருந்து வெளியில் வர சில வழிமுறைகள் உள்ளன.

முதலில் உங்களது Firefox ப்ரவுசரை அப்டேட் செய்ய வேண்டும்.

அடுத்ததாக, உங்கள் கையடக்கத் தொலைபேசியில் நல்லதொரு வைரஸ் தடுப்பு, மற்றும் மால்வேர் எதிர்ப்பு மென்பொருளை நிறுவி அவற்றை எப்பொழுதும் புதுப்பித்துக்கொள்ள வேண்டும்.

ஒன்லைனில் உலாவும்போது எந்தவொரு தேவையற்ற லிங்ஸையும் க்ளிக் செய்யக்கூடாது.

சந்தேகத்துக்கிடமான ஏதாவதொரு குறைபாடு கணினியில் கண்டுபிடிக்கப்பட்டால் உடனே சைபர் செக்யூரிட்டி ரெஸ்போன்ஸ் குழுவுக்கு தெரிவிக்க வேண்டும்.

OruvanOruvan

Firefox browser