வரவேற்பை பெற்ற ஏ.ஐ ஆசிரியர்: மாணவர்களை அடையாளம் கண்டு கேள்வி கூட கேட்கிறதாம்

OruvanOruvan

Kerala Gets With India's First AI Teacher

இந்தியாவின் கேரள மாநிலத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் மாணவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் மூலம் இயங்கும் ஆசிரியர் சிறந்த வரவேற்பை பெற்றுள்ளது.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் இயங்கும் இந்த ஆசிரியைக்கு ஐரிஸ் (IRIS) என மாணவர்கள் பெயரிட்டுள்ளனர்

தரம் 8 மற்றும் 9ஆம் தரத்தில் கல்வி பயிலும் மாணவர்களே இந்த தொழினுட்ப்பத்தை உருவாக்கியுள்ளனர்.

ஐரிஸ் ஆசிரியையின் கழுத்துப் பகுதியில் உள்ள மைக் மூலம் மாணவர்கள் கேட்கும் கேள்விகள் ஆசிரியையால் உள்வாங்கப்படுகிறது.

குரல் வடிவில் உள்வாங்கப்படும் கேள்வி ஜெனரேடிவ் ஏஐ (Generative AI) என்ற தொழில்நுட்பம் மூலம் எழுத்து வடிவத்திற்கு மாற்றப்பட்டு அதற்கான விடைகள் பரீசீலிக்கப்படுகின்றன.

இதனையடுத்து மீண்டும் எழுத்து வடிவ பதில், குரல் வடிவத்திற்கு மாற்றப்பட்டு ஐரிஸ் ஆசிரியையால் கற்றல் செயற்பாடுகள் இடம்பெறுகின்றது.

மேலும் இந்த செயற்கை நுண்ணறிவு தொழினுட்கத்திற்கு கேமராக்கள் பொருத்துவதனூடாக மாணவர்களைத் தனித்தனியாக அடையாளம் கண்டு பெயரைக் கூறி அவர்களிடம் கேள்விகள் கேட்பார் என கூறப்படுகின்றது.