நியூரோலிங் படைத்த புதிய சாதனை: செஸ் விளையாடிய நோயாளி

OruvanOruvan

Neuralink: Musk's firm says first brain

தொழில்நுட்பமானது பல தடைகளைக் கடந்து அசுர வேகத்தில் வளர்ச்சியடைந்து வருகிறது.

இந்த வளர்ச்சியானது வளர்ந்து வரும் சமுதாயத்திடமும் , எதிர்கால சந்ததியிடமும் பாரிய வரவேற்பையும் பெற்று வருகிறது.

எலான் மஸ்கின் நரம்புக்- கணினி இடைமுக தொழில்நுட்ப (BCI) நிறுவனமான நியூரோலிங் புதிய சாதனையை படைத்துள்ளது.

நியூரோலிங் நிறுவனம் (Neuralink) அதன் முதல் மனித நோயாளியான நோலன் அர்பாக்கின் மூளையில் பொருத்தப்பட்ட கருவியைப் பயன்படுத்தி கணினி கர்சரை (cursor) கட்டுப்படுத்தி ஆன்லைனில் செஸ் விளையாடி சாதனை படைத்துள்ளது.

இந்த இணைப்பு, அவரது சிந்தனை சமிக்ஞைகளைத் திரையில் செயல்களாக மாற்றி, உடல் அசைவுகள் இல்லாமல் கர்சரை நகர்த்தவும் செஸ் நகர்த்தல்களை செய்யவும் அனுமதிக்கிறது.

கடந்த ஜனவரியில் அர்பாக் மீது நியூரோலிங் வெற்றிகரமாக மூளை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

சிக்கலான நரம்பியல் நிலைமைகளைச் சமாளிக்க மனித மூளைகளை கணினிகளுடன் இணைப்பதே நிறுவனத்தின் குறிக்கோளாக உள்ளது.