இனி வாட்ஸ் அப் ஸ்டேட்டஸாக ஒரு நிமிட வீடியோவை வைக்கலாம்: வரப்போகும் புது அப்டேட்

OruvanOruvan

Whatsapp New Update

மக்கள் அதிகமாக பயன்படுத்தும் ஆப்களில் வாட்ஸ் அப் முதலிடம் வகிக்கிறது.

அவ்வப்போது பயனர்களுக்கு புதுப்புது அப்டேட்டுக்களை வெளியிட்டு வரும் வாட்ஸ் அப் தற்போது அனைவரும் மகிழும் வகையில் ஒரு அப்டேட்டை விரைவில் அறிமுகப்படுத்தவுள்ளது.

அது என்ன அப்டேட் என்றால், வழமையாக 30 வினாடிகள் கொண்ட வீடியோக்களை தான் வாட்ஸ் அப் ஸ்டேட்டாக வைப்போம். ஆனால், தற்போது புதிய அப்டேட்டில் 60 வினாடிகள் கொண்ட வீடியோவை ஸ்டேட்டாக வைக்க முடியும்.

இந்த அம்சமானது, தற்போது சில பீட்டா பயனர்களுக்க கிடைக்கிறது. தற்போது இந்த அம்சமானது சோதனை செய்யப்பட்டு வருகிறது. விரைவில் அனைத்து பயனர்களுக்கு இந்த அப்டேட் கிடைக்கும்.

இந்த அப்டேட்டின் மூலம் இனி 1 நிமிட வீடியோவை பதிவேற்ற முடியும்.

OruvanOruvan

Whatsapp New Update