தொலைந்துபோன தொலைபேசி ஸ்விட்ச் ஆஃப் ஆகியிருந்தாலும் கண்டுபிடிக்கலாம்!: வரவிருக்கும் கூகுளின் மெகா அப்டேட்!
தற்போது எங்கு பார்த்தாலும் மொபைல் ஃபோன் திருட்டுச் சம்பவங்கள் அதிகரித்துவிட்டன. இந்நிலையில் ஃபோனை தொலைத்தவர்கள் அதனை எப்படி தேடிக் கண்டுபிடிப்பது என்று புலம்பிக் கொண்டிருப்பார்கள்.
இந்நிலையில், கூகுள் நிறுவனம் ஐஓ 2024 மாநாட்டில் தொலைந்துபோன கையடக்கத் தொலைபேசிகளை நெட்வெர்க் இல்லாத இடத்தில் இருந்தால்கூட எவ்வாறு கண்டுபிடிக்கலாம் என்ற அறிவிப்பை வெளியிட உள்ளது.
கூகுளின் ஆண்ட்ராய்ட் 15 அப்டேட், மொபைல் போன்களை பாதுகாப்பதில் மிகப்பெரிய தாக்கத்தை செய்யும்.
இந்த அப்டேட்டில் பயனர்கள் இண்டர்நெட் கனெக்ஷ்ன் இல்லாமல் தங்கள் கையடக்கத் தொலைபேசிகளை கண்டறியலாம். புளூடூத் பீக்கான் சிக்னலிங் மூலம் இந்த புதிய அம்சம் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த சிக்னலானது, தொலைந்துபோன கையடக்கத் தொலைபேசியின் இருப்பிடத்தை ரிலே செய்யும்.
இந்த ஆண்ட்ராய்ட் 15ஆல் மொபைல் ஆஃப் செய்யப்பட்டிருந்தாலும் தொலைந்துபோன ஸ்மார்ட்போன்களை புதிய அம்சம் கண்டறிய உதவும்.
இந்த Google I/O மாநாடானது, ஆண்ட்ராய்ட் 15ஐ காட்சிப்படுத்துவதோடு how to manage and secure our devices என்பதில் குறிப்பிடத்தக்க அப்டேட்டுக்களையும் அறிமுகப்படுத்துகிறது.