மடிக்கக்கூடிய மேக்புக் லேப்டொப்: புதிய தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தவுள்ள ஆப்பிள் நிறுவனம்
தொழில்நுட்பம் நாளுக்குநாள் வளர்ந்துகொண்டே செல்கிறது. முழு உலகமும் சட்டைப்பைக்குள் அடங்கிவிடும் அளவுக்கு தொழில்நுட்பம் வளர்ந்துவிட்டது.
அந்த வகையில் பல புதுமையான விடயங்களை நமக்கு அறிமுகப்படுத்தி தரும் ஆப்பிள் நிறுவனம், தற்போது மடிக்கக்கூடிய புதிய மேக்புக் லேப்டொப் தயாரிப்பு குறித்த சோதனை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆப்பிள் தயாரிப்புகள் குறித்து, ஆய்வு மேற்கொள்ளும் மிங்-சி குவோ, 20.3 இன்ச் அளவிலான மேக்புக் மடிக்கணினியை உருவாக்க முயற்சி மேற்கொண்டு வருவதாகவும் இது மடிக்கக்கூடிய ஃபோல்டபிள் தொழில்நுட்பத்தில் ஆப்பிளின் முயற்சியாகவும் இருக்கும் என தெரிவித்துள்ளார்.