சிறுவர்களின் உயிரைக் காப்பாற்ற புதிய சிகிச்சை தொழில்நுட்பம்!: அசத்தும் கனேடிய மருத்துவர்கள்

OruvanOruvan

New technology in canada

உலகில் எங்கு பார்த்தாலும் வீதி விபத்துக்களினால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது.

இதன்படி இந்த விபத்துக்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புக்களை குறைக்கும் வகையில், கனடாவைச் சேர்ந்த மருத்துவர்கள் புதிய தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்துள்ளனர்.

PeTIT VR எனப்படும் இந்த மெய்நிகர் தொழில்நுட்பத்தின் ஊடாக, தொலைவிலிருந்தாலும் விபத்துக்களில் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சையளிக்க முடியும்.

கனடாவிலுள்ள மொன்றியால் வைத்தியர்கள் சிறுவர்களின் உயிர்களைக் காக்கும் வகையில் இந்த மெய்நிகர் அவசர சிகிச்சைப் பிரிவு தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்துள்ளனர்.

இந்த தொழில்நுட்பத்தினால் வைத்தியர்களின் அறிவுறுத்தல்களுக்கு அமைய மருத்துவ உதவியாளர்களுக்கு சிகிச்சையளிக்க முடியும்.

இந்த புதிய தொழில்நுட்பம் தற்போது பரீட்சார்த்த மட்டத்திலேயே காணப்படுகிறது.