மின்சார வாகனத் துறையில் புதிய அறிமுகம்: டெஸ்லாவுக்கு போட்டியாக SU7 காரை அறிமுகப்படுத்திய ஜியோமி
சீன தொழில்நுட்ப நிறுவனமான ஜியோமி (Xiaomi) தனது முதல் மின்சார வாகன (EV) மொடலான ஸ்பீட் அல்ட்ரா 7 (SU7) என்ற காரை செவ்வாய்க்கிழமை (12) அறிமுகப்படுத்தியுள்ளது.
உலகின் மிகப்பெரிய வாகன சந்தையில் கடுமையான விலைப் போட்டிக்கு மத்தியில், ஸ்மார்ட்போன் நிறுவனமான Xiaomi, SU7 மின்சார கார் விநியோகங்களை இந்த மாதம் தொடங்கும் என்றும் கூறியுள்ளது.
இந்த காரின் விலை எதிர்வரும் மார்ச் 28 அன்று அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சீனாவின் ஐந்தாவது பெரிய ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான Xiaomi வாகன கொள்வனவு கட்டளைக்காக நாடு முழுவதும் உள்ள 29 நகரங்களில் 59 களஞ்சியசாலைகளை வைத்திருப்பதாக கூறுகிறது.
உலகின் மிகப் பெரிய கார் சந்தையான சீனாவில் உள்ள BYD மற்றும் Tesla போன்ற நிறுவனங்களுக்கு இடையேயான கடும் போட்டிகள் தீவிரமடைந்துள்ளது.
இந் நிலையில் வாகன போட்டித்துறையில் Xiaomi நிறுவனத்தின் முதல் அறிமுகமாகும் இதுவாகும்.
“நிறுவனம் உலகின் முதல் ஐந்து கார் தயாரிப்பாளர்களில் ஒருவராக மாறுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
அடுத்த 10 ஆண்டுகளில் தனது வாகன வணிகத்தில் 10 பில்லியன் அமெரிக்க டொலர் முதலீடு செய்யவுள்ளோம்.
SU7 ஆனது "சூப்பர் எலக்ட்ரிக் மோட்டார்" தொழில்நுட்பம், இது டெஸ்லா மற்றும் போர்ஷே மின்சார வாகனங்களை விட வேகமாகச் செல்லும் திறன் கொண்டது” என Xiaomi தலைமை செயல் அதிகாரி தெரிவித்திருந்தார்.
மொபைல் போன் போன்ற பிற மின்னணு சாதனங்களுடன் இணைத்துக் கொள்ளும் வசதியுடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த மின்சாரக் கார் வாடிக்கையாளர்களை கவர்ந்திழுக்கும் என்று Xiaomi நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
ஆண்டுக்கு 200,000 வாகனங்களை உற்பத்தி செய்யக்கூடிய பெய்ஜிங்கில் உள்ள அரசுக்கு சொந்தமான கார் உற்பத்தி நிறுவனமான BAIC குழுமத்தின் உற்பத்தி நிலையத்தில் SU7 கார் தயாரிக்கப்படும்.
சீனாவின் மின்சார வாகன சந்தையில் விலைப் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், Xiaomi யின் இந்த அறிமுகம் வந்துள்ளது.
பில்லியனர் எலோன் மஸ்க் தலைமையிலான டெஸ்லா மற்றும் BYD போன்ற உள்ளூர் போட்டியாளர்கள் அதன் வாகன விலைகளைக் குறைத்ததால், அண்மைய மாதங்களில் சீனாவில் நிறுவனங்களின் வாகனங்களின் விலையை ஆயிரக்கணக்கான டொலர்களாக குறைத்துள்ளது.
செவ்வாய்க்கிழமை அறிவிப்புக்குப் பின்னர் ஹொங்கொங்கில் Xiaomi பங்குகள் 10 வீதம் அதிகமாக உயர்ந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.