செய்திகள் உருவாக்க உதவுகிறதா AI தொழில்நுட்பம்!: என்னென்ன ஆபத்துக்கள் நிகழப்போகிறது?
உலகையே ஆட்டிப் படைக்கும் தொழில்நுட்பமாக AI உள்ளது.
அதிலும் தற்போது செய்தி வாசிப்பாளர்கள், ஆசிரியர் என எல்லா துறைகளிலும் AI ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
இந்நிலையில் 2024ஆம் ஆண்டில் அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகளில் தேர்தல் நடக்கவுள்ள நிலையில், மக்களை திசைதிருப்பும் நோக்கில் பல வேலைகள் இந்த AIயினால் நடத்தப்பட்டு வருகிறது.
மோசடி செய்யவும் போலியான பிரச்சாரங்களை மேற்கொள்ளவும் இந்த AI கருவிகள் பயன்படுத்தப்பட்டு வருவதாக ஆராய்ச்சிகள் மூலம் தெரிய வந்துள்ளன.
தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தவறான தகவல்களைப் பரப்ப, இந்த AI தொழில்நுட்பம் பயன்படுத்தக்கூடும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
அதுமட்டுமின்றி சுமார் 739 AI உருவாக்கிய செய்தித் தளங்கள் உள்ளன. இவை மனித மேற்பார்வையில்லாமலேயே செயல்படுகின்றன என நியூஸ்கார்ட் (NewsGuard) கூறுகிறது.
இந்த AI தொழில்நுட்பமானது இன்னும் என்னவெல்லாம் செய்ய காத்திருக்கிறதோ!