போலி விளம்பரங்களைக் கண்டு ஏமாற வேண்டாம்!: உண்மைத் தன்மையை சோதித்துப் பாருங்கள்

OruvanOruvan

Fake ads online

நாம் கையடக்கத் தொலைபேசியில் யூடியூப்போ அல்லது கூகுளிலோ ஏதேனும் ஒரு விடயத்தை தேடும்போது, பலவகையான விளம்பரங்கள் வந்து போகும்.

அவற்றுள் போலி விளம்பரங்களும் வரக்கூடும்.

ட்ரெண்டிங்கில் இருக்கும் பொருட்களை வரையறையின்றி இணையத்தளம் மூலம் விளம்பரம் செய்வார்கள்.

அந்த குறிப்பிட்ட பொருட்களை முன் தொகைகள் செலுத்தி வாங்கச் சொல்லி வற்புறுத்துவார்கள்.

பின்னர் டெலிவரி கட்டணங்களை கூடுதலாக கேட்டு கட்டாயப்படுத்துவார்கள்.

மக்களை ஏமாற்றும் வகையில் டெலிவரி ட்ராக்கிங்கை போலியாக அனுப்பி வைப்பார்கள். மக்கள் பணம் செலுத்திய பின்னர், எண்ணை ப்ளொக் செய்து தப்பிப்பார்கள்.

OruvanOruvan

Fake ads online

அதுமட்டுமில்லாமல் இந்த ஆஃபர் குறிப்பிட்ட காலம் வரைதான் என்று கூறுவார்கள்.

இந்த போலி விளம்பரங்களில் ஏமாறாமல் இருக்க, விளம்பரங்களை பார்த்ததும் கமெண்ட்களை சென்று பார்வையிட வேண்டும். அது சரியான விளம்பரம் தானா என்பதை ஆய்வு செய்ய வேண்டும்.

சம்பந்தப்பட்ட நிறுவனத்தை நம்பத் தகுந்த இணையத்தளங்கள் மூலம் ஆய்வு செய்ய வேண்டும்.

இதன் மூலம் விளம்பரங்களின் உண்மைத் தன்மையை அறிந்துகொள்ள முடியும்.