பழைய குறுஞ்செய்திகளை தேடணுமா?: இலகுவான வழியை அறிமுகப்படுத்திய மெட்டா

OruvanOruvan

WhatsApp new update

தற்போது அனைவருமே பயன்படுத்தும் ஒரு செயலியாக வாட்ஸ் அப் உள்ளது.

குறுஞ்செய்திகள் அனுப்பவும், வீடியோ, ஓடியோ அழைப்புகள் எடுக்கவும் வாட்ஸ் அப் மிகவும் உதவிகரமாக அமைகிறது.

அந்த வகையில் தற்போது, வாட்ஸ் அப்பில் பழைய செய்திகளை தேடுவதை மெட்டா இன்னும் இலகுவாக்கியுள்ளது.

வழமையாக நாம் வாட்ஸ் அப்பில் பழைய குறுஞ்செய்திகளை தேடுவதென்றால் ஸ்க்ரோலிங் செய்து தேடுவோம்.

ஆனால், தற்போது லேட்டஸ்ட் அப்டேட் மூலமாக பயனர்கள் திகதியை கொடுத்து வாட்ஸ் அப்பில் குறிப்பிட்ட செய்தி அல்லது மீடியாவைத் தேடலாம்.

இந்த புதிய வசதியானது ஆண்ட்ராய்ட் மற்றும் ஐபோன்களிலும் வெளியிடப்பட்டுள்ளது.

OruvanOruvan

WhatsApp new update

வாட்ஸ் அப்பில் குறிப்பிட்ட திகதிக்கான குறுஞ்செய்தியை எப்படி தேடுவது?

முதலில் வாட்ஸ் அப்பில் சாட்டிங் அல்லது குழுவுக்குச் சென்று, அங்கே search என்பதைத் தேர்ந்தெடுங்கள்.

இப்போது தொலைபேசியின் மேல் வலது மூலையில் ஒரு காலெண்டர் ஐகோன் காண்பிக்கப்படும்.

இந்த காலண்டர் ஐகோனை க்ளிக் செய்து, திகதியை தேர்ந்தெடுங்கள். இப்போது குறிப்பிட்ட திகதியிலிருந்து வரும் செய்திகளுக்கு வாட்ஸ் அப் உங்களை அழைத்துச் செல்லும்.

மிகவும் பழைமையான குறுஞ்செய்திகளை தேடுவதில் இருக்கும் சிரமத்தைக் குறைக்கவே மெட்டா நிறுவனம் இந்த புதிய அம்சத்தை நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளது.