ப்ளே ஸ்டோரிலிருந்து நீக்கப்பட்ட முக்கிய செயலிகள்!: காரணம் என்ன?

OruvanOruvan

Play store

கூகுள் நிறுவனத்தின் பில்லிங் கொள்கைகளுடன் இணங்காத காரணத்தினால், சில ஆப்கள் ப்ளே ஸ்டோரிலிருந்து நீக்கப்பட்டுள்ளன.

சுமார் 10க்கும் மேற்பட்ட செயலிகளை கூகுள் நீக்கியுள்ளது.

அதில் மேட்ரிமோனி நிறுவனமான பாரத் மேட்ரிமோனி, தமிழ் மேட்ரிமோனி, மராத்தி மேட்ரிமோனி, தெலுங்கு மேட்ரிமோனி,shaadi.com, டேட்டிங் செயலிகளான Quasckquack, Truly madly, Aha,Alt Balaji, Stage, Kuku Fm உள்ளிட்ட போட்காஸ்ட் செயலி, Nauri.com.Jeevsathi, 99acres போன்ற செயலியும் நீக்கப்பட்டுள்ளன.

இதற்கு முன்பும் இந்த செயலிகளின் நிறுவனங்கள் நீதிமன்றத்தின் மூலம் இடைக்கால தடையைப் பெற முடிவெடுத்தனர்.

OruvanOruvan

Play store

ஆனால், உச்ச நீதிமன்றம் இந்த விடயத்தில் தலையிடவில்லை. பிற செயலிகள் இணங்கும் கூகுளின் பில்லிங் முறையை அந்நிறுவனம் செயல்படுத்த அனுமதி அளித்து உத்தரவிட்டது.

இந்த உத்தரவுக்குப் பின்னரும் இந்நிறுவனங்களுக்கு மூன்று வாரங்கள் கூடுதல் கால அவகாசம் அளித்திருக்கிறது.

இந்நிலையில், தற்போது Shaadi.com செயலி மற்றும் info edge செயலிகள் மீண்டும் ப்ளே ஸ்டோரில் வருவதாக தெரிவிக்கப்படுகிறது.