ஐபோனில் எவ்வாறு ஸ்லோ மோஷன் வீடியோ எடுப்பது?: அட இவ்வளவு சுலபமா?

OruvanOruvan

iPhone slow motion video

சமூக வலைத்தளங்களைப் பொறுத்தவரையில் ரீல்ஸ், ஷொர்ட்ஸ் வீடியோ போன்ற வீடியோக்களை பதிவிடுவதற்கு பெரும்பாலும் அனைவருமே ஸ்லோ மோஷன் வீடியோக்களையே பயன்படுத்துகிறார்கள்.

தற்போது வரக்கூடிய அனைத்து ஸ்மார்ட் போன்களிலுமே ஸ்லோ மோஷன் வீடியோ எடுக்கும் வசதிகள் உள்ளன.

அந்த வகையில் ஐபோனில் ஸ்லோமோஷன் வீடியோக்கள் எவ்வாறு எடுக்கலாம் எனப் பார்ப்போம்.

OruvanOruvan

iPhone slow motion video

  • முதலாவதாக உங்கள் ஐபோன் கேமராவை open செய்து கொள்ளவும்.

  • பின் அதில் வலது பக்கம் swipe செய்துகொண்டே வந்தால் ஸ்லோமோஷன் என்ற option இருக்கும். அதை தெரிவு செய்ய வேண்டும்.

  • அந்த ஸ்லோமோஷன் மோடிற்குள் உங்களுக்கு விருப்பமன ஃப்ரேம் விகிதங்களை செட் செய்யுங்கள்.

  • பின்னர் நீங்கள் ஸ்லோ மோஷனில் வீடியோ எடுக்க வேண்டிய பொருள் அல்லது காட்சியை நோக்கி உங்கள் ஐபோன் கேமராவை திருப்பிக் கொள்ளுங்கள்.

  • இப்போது சிவப்பு நிற பட்டனை அழுத்தி காட்சியை ரெக்கார்ட் செய்யுங்கள்.

  • தேவையானவற்றை ரெக்கார்ட் செய்த பின் ஸ்டொப் பட்டனை அழுத்தி வீடியோவை நிறுத்திக் கொள்ளுங்கள்.

  • இப்போது நீங்கள் எடுத்துக்கொண்ட வீடியோவை எடுத்து பாருங்கள்.

OruvanOruvan

iPhone slow motion video

நீங்கள் இந்த ஸ்லோ மோஷன் வீடியோவில் ஏதேனும் எடிட் செய்ய வேண்டுமென்றால்,

  • நீங்கள் எடுத்துள்ள வீடியோவின் thumbnailயை அழுத்தி அதில் எடிட் பட்டனை தெரிவு செய்யுங்கள்.

  • இப்போது வீடியோவின் கீழ் வரிசையாக டைம் ஃப்ரேம் வரும். அதில் உங்களுக்கு தேவையான காட்சியை மட்டும் தெரிவு செய்து அதனை ஸ்லோ மோஷனில் இயக்க முடியும்.