உங்கள் பழைய கையடக்கத் தொலைபேசியை அதிக விலைக்கு விற்க வேண்டுமா?: அப்போ இதை பண்ணுங்க

OruvanOruvan

Old mobile selling

நீங்கள் உபயோகித்த கையடக்கத் தொலைபேசியை விற்பனை செய்யப் போகிறீர்களா? விற்பனை செய்யவுள்ள தொலைபேசியில் நீங்கள் எதிர்பார்த்த அளவு இலாபம் கிடைக்க வேண்டுமா? அதற்கு சில விடயங்களை நீங்கள் பின்பற்ற வேண்டும்.

பழைய கையடக்கத் தொலைபேசியை விற்கும்போது செய்யக்கூடாத தவறுகள்...

தொலைபேசியின் முழு தகவல்

நாம் வைத்திருந்த தொலைபேசியை இன்னொருவருக்கு விற்கும்பொழுது, அந்த தொலைபேசியின் அனைத்து விபரங்களையும் வாங்குபவரிடம் கூற வேண்டும்.

அதாவது, தொலைபேசியின் மாதிரி எண், விவரக் குறிப்பு, நிலை, தொலைபேசியில் ஏதேனும் பிரச்சினை இருந்தால் அதையும் கட்டாயம் தெரியப்படுத்த வேண்டும்.

தொலைபேசி சுத்தம்

தொலைபேசியை விற்பனை செய்யும்முன் அதனை நன்றாக சுத்தம் செய்யவேண்டும். அதாவது, தொலைபேசியின் உட்புறத்தையும் வெளிப்புறத்தையும் நீங்கள் நன்றாக சுத்தம் செய்வதோடு, உங்கள் சம்பந்தப்பட்ட அனைத்து டேட்டாக்களையும் நீக்கிவிடவும்.

OruvanOruvan

Old mobile selling

நியாயமான விலை

சந்தையில் இதேபோன்ற தொலைபேசிகள் என்ன விலைக்கு விற்பனையாகின்றது என்பதை தெரிந்துகொண்டு அதற்கேற்ப விற்பனை செய்யலாம். சீக்கிரம் விற்பனை செய்யவேண்டும் என்றால் விலையை குறைப்பதே சிறந்தது.

தொலைபேசிக்கான உபகரணங்களை வழங்குதல்

நீங்கள் விற்பனை செய்யப்போகும் தொலைபேசியின் சார்ஜர், ஹெட்போன், மெமரி கார்ட், கேரண்டி கார்ட் என அனைத்தையும் வாங்குபவருக்கு கொடுக்க வேண்டும். இல்லையெனில் அதற்கேற்ப வாங்குபவர்கள் மொபைலின் விலையைக் குறைப்பார்கள்.

புகைப்படம்

நீங்கள் விற்கப்போகும் தொலைபேசியை வேறொரு நல்ல கெமராவில் புகைப்படம் எடுத்துக் கொள்ளுங்கள். மொபைலில் ஏதெனும் குறைபாடு இருந்தால் அதனையும் படம் எடுக்கவும்.

OruvanOruvan

Old mobile selling

தொலைபேசியை பயன்படுத்த அனுமதியுங்கள்

உங்கள் கையடக்கத் தொலைபேசியை வாங்குபவருக்கு அதனை ஆய்வு செய்ய சந்தர்ப்பம் வழங்குங்கள். அவர் எதிர்பார்க்கும் அம்சம் உங்கள் கையடக்கத் தொலைபேசியில் இருந்தால் அவர் அதனை கட்டாயம் வாங்கிக் கொள்வார்.

அணுகுமுறை

தொலைபேசியை வாங்குபவரிடம் அன்பாக நடந்துகொள்ள வேண்டும். உங்கள் பேச்சில் கனிவு இருந்தால் வாங்குபவருக்கு நம்பிக்கை ஏற்படும்.