உங்க வீட்டிலுள்ள WIFIஇல் இணையம் சரியாகக் கிடைக்கவில்லையா?: அப்போ இப்படி பண்ணுங்க

OruvanOruvan

WIFI router problems

தற்போது பலபேர் வீட்டிலிருந்தே அலுவலகப் பணிகளை மேற்கொள்வதால் அவர்கள் வீட்டிலேயே வைஃபை ரூட்டரை பயன்படுத்துகின்றனர். அலுவலகப் பணிகளுக்கு மட்டுமில்லாமல் தனிப்பட்ட தேவைகளுக்காகவும் இந்த வைஃபை கனெக்ஷ்னை மக்கள் பயன்படுத்துகிறார்கள்.

ஆனால், ஒரு சிலருக்கு இந்த வைஃபையில் இருக்கும் பிரச்சினை என்னவென்றால், எவ்வளவு அதிகமான விலையில் வைஃபை கனெக்ஷன் எடுத்திருந்தாலும் அவர்களது இணையத்தின் வேகம் குறைவாகவே இருக்கும்.

இதற்கு பல காரணங்கள் இருக்கலாம். அதில் மிக முக்கிய காரணம் என்னவென்றால், தவறான இடத்தில் வைஃபை ரூட்டரை வைப்பதுதான். எவ்வளவு அதிகமாக பணம் கொடுத்து வாங்கியிருந்தாலும் சரியான இடத்தில் வைஃபையை வைக்காவிட்டால் அதிலிருந்து முழுமையான பலனைப் பெற முடியாது.

OruvanOruvan

WIFI router problems

உங்கள் வீடு மூன்று மாடியைக் கொண்டதாக இருந்தால், அதில் நடுத்தர தளத்தில் வைஃபை ரூட்டரை வைக்கவும். அப்போதுதான் எதுவித பிரச்சினையும் இல்லாமல் கீழ்தளம் மற்றும் மேல்தளத்தில் எந்த இடையூறும் இல்லாமல் இணையம் கிடைக்கும்.

அதுமட்டுமின்றி ஒரு சில வீடுகளில் வைஃபை ரூட்டரை மேசையின் மீது வைப்பார்கள். இதன் காரணமாகவும் இணையத்தின் வேகம் பாதிக்கப்படும். அதனால் எப்போதுமே வைஃபை ரூட்டரை உயரமான இடங்களில் வைக்க வேண்டும். அப்போதுதான் எல்லா இடத்துக்கும் இணையம் சரி சமமாக கிடைக்கும்.

மேலும் வைஃபை ரூட்டரை மூடி இருக்கும் அறைகளில் வைக்கக்கூடாது. அப்படி வைத்தால் இணையத்தின் வேகம் பாதிக்கப்படும்.

OruvanOruvan

WIFI router problems

வீட்டின் முன்புற அறையில் வைஃபை ரூட்டரை வைக்கக்கூடாது. அவ்வாறு வைத்தால் முழு வீட்டுக்கும் அதன் வேகம் கிடைப்பதில் சிக்கல்கள் ஏற்படும்.

வேறு காரணங்கள்

மேல் கூறப்பட்ட காரணங்கள் தவிர்த்து இன்னும் சில காரணங்களினாலும் இணையத்தின் வேகம் குறையலாம்.

அதாவது, பீக் நேரங்களில் இணையம் சரியாக கிடைக்காமல் போகலாம். ஒரே நேரத்தில் பல சாதனங்கள் வைஃபையில் கனெக்ட் ஆகியிருந்தாலும் இணையத்தின் வேகம் குறைவாக கிடைக்கும்.