பூமியை போல் மற்றொரு கிரகம்: 137 ஒளி ஆண்டுகள் தொலைவு

OruvanOruvan

The parent star of TOI-715 b is a red dwarf

ஒரு அற்புதமான கண்டுபிடிப்பில் நாசாவின் விஞ்ஞானிகள் 'சூப்பர் எர்த்' என்ற புதிய கிரகத்தை கண்டுபிடித்துள்ளனர்.

இந்த புதிய கிரகம் உயிர்கள் வாழ்வதற்கான சூழ்நிலைகளை கொண்டதாக கருதப்படுகிறது.

TOI-715 b என்று பெயரிடப்பட்டுள்ள இந்த கிரகம் பூமியில் இருந்து சுமார் 137 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது மற்றும் பூமியை விட ஒன்றரை மடங்கு அகலம் கொண்டது.

இது ஒரு சிறிய சிவப்பு நிற நட்சத்திரத்தைச் சுற்றி வருவதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இது "திரவ நீர் அதன் மேற்பரப்பில் உருவாக சரியான வெப்பநிலையை கிரகத்திற்கு கொடுக்க முடியும்" என்று தெரிவிக்கின்றனர்.

அதற்கு அருகிலேயே பூமி அளவிலான மற்றொரு கிரகம் கூட இருக்கலாம் என்றும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

நாசாவின் கூற்றுப்படி, இந்த கிரகம் தனது ஒரு சுற்றுப்பாதையை ஒரு முறை முழுமையாக சுற்றிவர வெறும் 19 நாட்களே ஆகிறது. அதாவது இந்த கிரகத்தில் ஓர் ஆண்டு என்பது 19 நாள்தான்.

மேற்பரப்பில் நீர் இருக்க வேண்டுமானால், அதற்குப் பொருத்தமான வேறு பல வளிமண்டல பல காரணிகளும் இருக்க வேண்டும்.

இதுவரை செய்யப்பட்ட தோராய அளவீடுகள் மூலம், இந்தச் சிறிய கிரகம் பூமியைவிட சற்று பெரியதாக இருக்கலாம் என்று நாசா கூறுகிறது.

இந்த கிரகம் சுற்றிவரும் சிவப்பு நட்சத்திரம் சூரியனை விட சிறியது மற்றும் குளிர்ச்சியானது.

இதே போலவே, பல நட்சத்திரங்கள் சிறிய, பாறை உலகங்களை உருவாக்குவதாகக் கருதப்படுகிறது என்றும் நாதா தெரிவிக்கிறது.

இந்த கிரகங்கள் நமது சூரியக் குடும்பத்தில் உள்ள கிரகங்களை விட மிக நெருக்கமான சுற்றுப்பாதைகளைக் கொண்டுள்ளன.

ஆனால் அவை சுற்றிவரும் நட்சத்திரம் சிறியதாகவும் குளிர்ச்சியானவையாகவும் இருப்பதால், கிரகங்கள் நெருக்கமாக கூடியுள்ளன.

இருந்தாலும் அவை உயிரினங்கள் வாழ பாதுகாப்பாக இருக்கும் என்றும் நாசா விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

TOI-175 b என்ற கிரகமானது தற்சமயம் மனிதர்கள் வாழக்கூடிய மண்டலத்தில் உள்ள கிரகங்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.