உபர் ரேட்டிங்: பயணிகளுக்கும் விதிக்கப்படும் ரேட்டிங்கின் அவசியத்தை தெரிந்துகொள்ளுங்கள்

OruvanOruvan

Star rating for passengers

வாடகை வாகனங்களில் பயணிக்கும் நாம் சாரதியின் மதிப்பீடு பற்றியே அறிவோம். ஆனால் பயணிகளுக்கு கொடுக்கப்பட்ட மதிப்பீடு பற்றி சிந்திக்கவேண்டும். எப்படி நாம் பயணத்தை மதிப்பிடுகிறோமோ, அதேபோல உபர் ஓட்டுநரும் நம்மை மதிப்பிடுவார்.

குறைந்த செலவில் பயணங்களை மேற்கொள்ள வாடகை வாகனங்களை பதிவு செய்கிறோம். உபர் (Uber) அல்லது பிக்மி (Pick me) செயலியில் இருந்து பதிவுசெய்தால் நாம் இருக்கும் இடத்திற்கே வாகனங்கள் நம்மை அழைத்துச் செல்லும்.

இந்த சேவையில் முன்னணியாக இருக்கும் உபர் நிறுவனம், பயணிகளுக்கு பல அம்சங்களை வழங்கியுள்ளது. அதேபோல, பயணிகள் தங்கள் பயணத்தை மதிப்பீடு செய்யவும் அனுமதிக்கிறது.

இந்நிலையில், சில வாடிக்கையாளர்களுக்கு செயலியில் இருந்து பதிவு செய்தாலும், அவர்களின் பயணத்தை எந்தவொரு உபர் (Uber)அல்லது பிக்மி (Pick me) ஓட்டுநரும் ஏற்றுகொள்ளாமல் இருக்கும் சூழல் உள்ளது.

இதற்கு முக்கிய காரணம் பயணிகளுக்கு கொடுக்கப்பட்ட மதிப்பீடு என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

எப்படி நாம் பயணத்தை மதிப்பிடுகிறோமோ, அதேபோல உபர் (Uber) அல்லது பிக்மி (Pick me) ஓட்டுநரும் நம்மை மதிப்பிடுவார்.

ஒன்று முதல் ஐந்து நட்சத்திர மதிப்பீடுகள் வரை நமக்கு அளிக்கப்படுகிறது.

எனவே, நம் மதிப்பீடுகள் கவனம் செலுத்தினால் தான், வேகமாக வாகனங்களை பதிவு செய்ய முடியும்.

OruvanOruvan

Star rating for passengers

நமக்கு கொடுக்கப்பட்டுள்ள மதிப்பீடுகளை எப்படி சரிபார்ப்பது

ஓட்டுநர்களும் பயணிகளை மதிப்பிடுகிறார்கள் என்பது பெரும்பாலான பயணிகளுக்குத் தெரியாது. நாம் வாகனத்தில் விட்டுச் செல்லும் குப்பைகள் நம் ரேட்டிங்கை குறைக்கலாம் அல்லது ஓட்டுநருடன் ஒரு மரியாதையான உரையாடலை மேற்கொண்டது ரேட்டிகை அதிகரிக்கும்.

  • செட்டிங்ஸ் மெனுவில், பிரைவசி என்பதை கிளிக் செய்யவும்

  • தொடர்ந்து பிரைவசி சென்டரை கிளிக் செய்யவும்

  • வலதுபுறமாக ஸ்வைப் செய்து, “நீங்கள் Uber-ஐ எப்படிப் பயன்படுத்துகிறீர்கள் என்பதற்கான சுருக்கத்தைப் பார்க்க விரும்புகிறீர்களா” என்பதைக் கிளிக் செய்யவும்.

  • தரவை பார்க்க Browse my data பகுதிக்கு சென்று கீழே ஸ்கிரால் செய்து View My Ratings என்பதை கொடுக்கவும்.

  • இதில் உங்கள் மதிப்பீடுகளைப் பார்ப்பதுடன், பயனர்கள் தங்கள் கடந்த கால பயணங்களின் தகவல்கள், கட்டண விவரங்கள் என பலவற்றை மதிப்பாய்வு செய்யலாம்.