2023-ல் அதிகம் uninstall செய்யப்பட்ட செயலி: இன்ஸ்டாகிராம் தளத்தில் இருந்து வெளியேற பலர் விருப்பம்

OruvanOruvan

Apps

டி.ஆர்.ஜி. டேட்டா செண்டர்ஸ் வழங்கியிருக்கும் சமீபத்திய தகவல்களில் ஸ்மார்ட்போன் பயனர்கள் இந்த ஆண்டு அதிகம் uninstall செய்த செயலிகள் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி சமூக வலைதளங்களை பயன்படுத்துவோரில் பெரும்பாலானோர் இன்ஸ்டாகிராம் தளத்தில் இருந்து வெளியேற விருப்பம் தெரிவித்துள்ளனர்.

இந்த 2023-ல் மட்டும் உலகளவில் சுமார் பத்து லட்சத்திற்கும் அதிகமானோர் "இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட்-ஐ எப்படி டெலிட் செய்ய வேண்டும்" என்று தொடர்ச்சியாக கூகுளில் தேடியுள்ளனர்.

உலகளவில் ஒரு லட்சம் பேரில் 12 ஆயிரத்து 500 பேர் வரை இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட்-ஐ அழிப்பது தொடர்பான இணைய தேடலில் ஈடுபட்டுள்ளனர்.

அதே சமயத்தில் உலகளவில் உள்ள சமூக வலைதளங்களில் முன்னணி தளமாக இன்ஸ்டாகிராம் தொடர்ந்து நீடிப்பது குறிப்பிடத்தக்கது.

OruvanOruvan

Instagram