சூரியனை படம் பிடித்து அனுப்பியது ஆதித்யா-எல்1: இஸ்ரோ விஞ்ஞானிகள் சாதனை

OruvanOruvan

சூரியனை ஆய்வு செய்வதற்கு இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) அனுப்பியிருந்த ஆதித்யா-எல்1 விண்கலம் சூரியனின் முதல் முழு வட்டப் படங்களை அனுப்பியுள்ளது.

ஆதித்யா-எல்1 விண்கலத்தில் சூரிய புற ஊதா Imaging Telescope (SUIT) கருவி மூலம் படங்கள் எடுக்கப்பட்டதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.

200 முதல் 400 என்எம் வரையிலான அலைநீளங்களில் 11 வெவ்வேறு filterகளை பயன்படுத்தி இந்தப் படங்கள் எடுக்கப்பட்டுள்ளதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்தப் படங்களில் சூரிய புள்ளிகள், Plage மற்றும் அமைதியான சூரிய மண்டலங்கள் ஆகியவை அடங்கும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஆதித்யா-எல்1 மிஷன்

இந்தியாவின் முதல் சூரியப் பயணம் செப்டம்பர் இரண்டாம் திகதி ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தின் (SDSC) இரண்டாவது ஏவுதளத்தில் இருந்து ஏவப்பட்டது.

ஆதித்யா-எல்1 ஆனது இஸ்ரோ மற்றும் பல்வேறு தேசிய ஆராய்ச்சி ஆய்வகங்களால் உள்நாட்டில் உருவாக்கப்பட்ட ஏழு அறிவியல் Payloadகளுடன் பொருத்தப்பட்டுள்ளது.

இந்த Payloadகள் மின்காந்த, துகள் மற்றும் காந்தப்புலங்களை பயன்படுத்தி ஒளிக்கோளம், குரோமோஸ்பியர் மற்றும் கரோனா எனப்படும் சூரியனின் வெளிப்புற அடுக்குகளை ஆய்வு செய்ய வடிவமைக்கப்பட்டுள்ளன.

குறிப்பிடத்தக்க வகையில், ஆதித்யா-எல்1 2024ஆம் ஆண்டு ஜனவரி மாதம் எல்1 புள்ளியை அடைந்துவிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, பூமியிலிருந்து சுமார் 1.5 மில்லியன் கிலோ மீற்றர் தொலைவில் உள்ள எல்1 புள்ளியை ஜோசப் லூயிஸ் லாக்ரேஞ்ச் என்ற கணிதவியலாளர் கண்டுபிடித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.