youths Archives - Oruvan.com

முல்லைத்தீவு இளைஞர் மரணம் – மூன்று இராணுவ சிப்பாய்களுக்கு விளக்கமறியல்
முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முத்துஐயன்கட்டு குளத்திலிருந்து இளைஞர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட மூன்று இராணுவ சிப்பாய்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

கைதானவர்கள் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்ட்டதையடுத்து எதிர்வரும் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த இளைஞனின் மரணம் தொடர்பில் பிரதேச மக்கள் வழங்கிய வாக்குமூலத்திற்கு அமைய முத்துஐயன்கட்டு இராணுவ முகாமை சேர்ந்த மூன்று இராணுவ சிப்பாய்களே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

அந்த பகுதியை சேர்ந்த 05 இளைஞர்களை இரும்பு சேகரிக்க வருமாறு அழைத்து இராணுவ சிப்பாய்கள் அவர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக அப்பகுதி மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

இதன்போது அங்கிருந்து தப்பிப்பதற்காக குளத்தில் குதித்த போதே குறித்த இளைஞன் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, முல்லைத்தீவு பொலிஸ் அத்தியட்சகர் பிரிவுக்குட்பட்ட ஒட்டுசுட்டான் பொலிஸ் நிலையத்தின் சிவநகரில் பிரதேசத்தில் அமைந்துள்ள 12 ஆவது சிங்கப் படையணி முகாமை அப்புறப்படுத்துவதற்கு சில நாட்களாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்ததாக ஒட்டுசுட்டான் பொலிஸ் பிரிவு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் கடந்த ஏழாம் திகதி இரவு, அகற்றப்பட்ட இரும்பு மற்றும் வெளிப்புறப் பொருட்களை எடுத்துச் செல்வதற்காக முகாம் வளாகத்தினுள் அனுமதியின்றி நுழைந்த ஐவரை வெளியேற்றுவதற்கே நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இதன்போது தப்பிச் செல்ல முயன்ற ஒருவரே முத்துஐயன்கட்டுக் குளத்தில் மூழ்கி உயிரிழந்ததாகவும் ஒட்டுசுட்டான் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எவ்வாறாயினும் ஒட்டுசுட்டான் பொலிஸாரும் பொலிஸ் விசேட அதிரடிப் படையினரும் இணைந்து அந்தப் பகுதியில் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளனர்.

The post முல்லைத்தீவு இளைஞர் மரணம் – மூன்று இராணுவ சிப்பாய்களுக்கு விளக்கமறியல் appeared first on Oruvan.com.

இஸ்ரேலில் இலங்கை இளைஞர்களை ஏற்றிச் சென்ற பேருந்து முற்றிலும் தீக்கிரை
இஸ்ரேலில் விவசாய தொழிலுக்காக, இலங்கை இளைஞர்களை ஏற்றிச் செல்லும் பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் பேருந்து முற்றிலுமாக தீக்கிரையாகியுள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார தெரிவித்தார்.

இஸ்ரேலின் Kiryat Malakhi பிரதேசத்திற்கு அருகே நேற்று வெள்ளிக்கிழமை (18) காலை விவசாய நடவடிக்கைகளுக்காக சென்று கொண்டிருந்தபோது இந்த விபத்து சம்பவித்துள்ளது.

இந்த விபத்தின் போது பேருந்தில் 20 இலங்கையர்கள் பயணித்ததாக தெரிவிக்கப்படுகிறது.

தீ பரவலின் பின்னர்  பேருந்தின் கதவுகள் மூடப்பட்டிருந்ததால், அவர்கள் அனைவரும் ஜன்னல்களை உடைத்து வௌியேறியுள்ளனர்.

விபத்தில் ஒருவரது காலில் காயம் ஏற்பட்டதைத் தொடர்ந்து அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார், எனினும் அவரது நிலைமை கவலைக்கிடமாக இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தொடர்புடைய நிறுவனமும் அவர்களின் செயற்பாடுகளை அவதானித்து வருவதாகவும், ஏனையோர் வழமை போன்று தங்களது நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகவும் இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார மேலும் தெரிவித்தார்.

The post இஸ்ரேலில் இலங்கை இளைஞர்களை ஏற்றிச் சென்ற பேருந்து முற்றிலும் தீக்கிரை appeared first on Oruvan.com.