Yoshitha Rajapaksa Archives - Oruvan.com

யோஷிதவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷ மற்றும் அவரது பாட்டி டெய்சி ஃபாரெஸ்ட் ஆகியோருக்கு எதிராக பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை அக்டோபர் 29ஆம் திகதிக்கு ஒத்திவைக்க கொழும்பு உயர் நீதிமன்றம் இன்று (04) உத்தரவிட்டது.

குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது பிரதிவாதிகள் நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்தனர். எனினும், வழக்கை விசாரிக்கும் கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி பிரதீப் அபேரத்ன இன்று வருகைதரவில்லை.

நீதிபதி விடுமுறையில் இருந்ததால் இன்று வருகைதரவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வழக்கை அக்டோபர் 29ஆம் திகதிக்கு மீண்டும் விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

யோஷித ராஜபக்ஷ மற்றும் டெய்சி ஃபாரெஸ்ட் ஆகியோரால் பராமரிக்கப்பட்ட 59 மில்லியன் ரூபா கூட்டுக் கணக்கு தொடர்பான பணமோசடி வழக்கில் டெய்சி ஃபாரெஸ்ட் சந்தேக நபராக பெயரிடப்பட்டார்.

சட்டமா அதிபர் இந்த பிரதிவாதிகளுக்கு எதிராக மூன்று குற்றச்சாட்டுகளின் பேரில் இந்த வழக்கைத் தாக்கல் செய்திருந்தார்.

மார்ச் 31, 2009 முதல் டிசம்பர் 12, 2013 வரை மூன்று தனியார் வங்கிக் கணக்குகளில் நிலையான வைப்பு கணக்குகளில் 59 மில்லியன் ரூபாய் சட்டவிரோதமாகப் பெறப்பட்டதாகக் கூறப்படுகிறது.

The post யோஷிதவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு appeared first on Oruvan.com.

யோஷித, டெய்சி பாட்டி ஆகியோருக்கெதிரான வழக்கு ஒத்திவைப்பு
யோஷித ராஜபக்ச மற்றும் அவரது பாட்டி டெய்சி ஃபாரெஸ்ட் ஆகியோருக்கு எதிரான பணமோசடி தடுப்புச் சட்டத்தை மீறியதாகக் கூறப்படும் வழக்கு செப்டம்பர் 22ஆம் திகதிக்கு ஒத்திவைத்து கொழும்பு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கு இன்று (28) உயர் நீதிமன்ற நீதிபதி சஹான் மாபா பண்டார முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது யோஷித ராஜபக்ச சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி சம்பத் மெண்டிஸ், சாட்சியத்தின் ஒரு பகுதியாக தடயவியல் தணிக்கை அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

மேலும், அறிக்கையைத் தொகுப்பதில் பயன்படுத்தப்பட்ட மின்னஞ்சல் தொடர்புகள் மற்றும் பல டிஜிட்டல் சாதனங்கள் அடங்கிய 26 குறுந்தகடுகளை ஆய்வு செய்ய நீதிமன்ற அனுமதியை அவர் கோரியிருந்தார்.

எவ்வாறாயினும், இந்த கோரிக்கைக்கு சட்டமா அதிபர் திணைக்களம் எந்த ஆட்சேபனையும் தெரிவிக்கவில்லை.

குற்றம் சாட்டப்பட்டவர்கள் பணமோசடி தடுப்புச் சட்டங்களை மீறி சுமார் 73 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை சட்டவிரோதமாகச் சம்பாதித்ததாக தெரிவித்து இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது.

சட்டமா அதிபரால் இது குறித்த குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

The post யோஷித, டெய்சி பாட்டி ஆகியோருக்கெதிரான வழக்கு ஒத்திவைப்பு appeared first on Oruvan.com.

இரவு விடுதியில் நடந்த மோதல் – மகிந்தவின் மகன் யோஷிதவுக்கு தொடர்பில்லை
கொழும்பு பார்க் வீதியில் உள்ள இரவு விடுதியில் நடந்ததாக கூறப்படும் மோதலில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகன் யோஷித ராஜபக்சவுக்கு தொடர்பு இல்லை என்பது பொலிஸாரின் ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

வெள்ளிக்கிழமை இரவு விடுதிக்கு வெளியே யோஷித ராஜபக்சவுடன் வந்த ஒரு குழு மோதலில் ஈடுபட்டதை அடுத்து, கொம்பனி வீதி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இந்த மோதல் குறித்த காட்சிகள் சிசிடிவி கேமராக்களில் பதிவாகியுள்ளது. இந்த சம்பவத்தின் போது விடுதியை சேர்ந்த ஒரு பாதுகாவலர் காயமடைந்து தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்.

விடுதியினுள் செல்வதற்க அடையாள மணிக்கட்டு பட்டி அணிவது கட்டாயம் என்று பாதுகாவலர்கள் தெரிவித்ததை அடுத்து ஏற்பட்ட வாக்குவாதத்தைத் தொடர்ந்து இந்த மோதல் நடந்ததாக தெரிவிக்கப்பட்டது.

குழு உறுப்பினர்களில் ஒருவரிடம் அத்தகைய பட்டி இல்லாததால் பாதுகாப்பு காவலர் நடத்திய விசாரணையின் போது வாக்குவாதம் ஏற்பட்டது.

வாக்குவாதம் ஏற்பட்டபோது யோஷித ராஜபக்சவும் அவரது மனைவியும் சம்பவ இடத்தை விட்டு வெளியேறிவிட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில் தொடர்புடைய சந்தேக நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவர்களை கைது செய்வதற்கான விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

The post இரவு விடுதியில் நடந்த மோதல் – மகிந்தவின் மகன் யோஷிதவுக்கு தொடர்பில்லை appeared first on Oruvan.com.

கொழும்பு இரவு விடுதியில் ஏற்பட்ட மோதல் – சந்தேக நபர்களை கைது செய்ய விசாரணை குழுக்கள்
கொழும்பு, யூனியன் பிளேஸ் – பார்க் வீதியில் உள்ள ஒரு இரவு விடுதியில் ஏற்பட்ட மோதலில் தொடர்புடைய சந்தேக நபர்களைக் கைது செய்ய இரண்டு விசாரணைக் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகனான யோஷித ராஜபக்சவும் அவரது மனைவியுடன் வந்திருந்த குழுவினர் இந்த மோதலில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

களியாட்ட நிகழ்வில் கலந்து கொண்ட இவர்களில் ஒருவரின் கையில் அணிந்திருந்த ஆபரணம் ஒன்று தொடர்பாக இடம்பெற்ற வாக்குவாதத்தின் போது பாதுகாப்பு அதிகாரியை தாக்கியதாக தெரிவிக்கப்படுகின்றது.

களியாட்ட நிலைய முகாமையாளர் பொலிஸ் நிலையத்தில் செய்த முறைபாட்டுக்கு இணங்க சந்தேகநபர்கள் தேடப்பட்டு வருகின்றனர்

எவ்வாறாயினும், சம்பவம் இடம்பெற்ற போது யோஷிதவும் அவரது மனைவியும் அவ்விடத்தில் இருந்து சென்று விட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தாக்குதலில் ஒரு பாதுகாப்பு காவலர் காயமடைந்துள்ள நிலையில் அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக பலரிடம் வாக்குமூலங்களைப் பதிவு செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர்கள் தெஹிவளை, அத்திடிய மற்றும் திம்பிரிகஸ்யாய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அவர்கள் தற்போது அந்தப் பகுதிகளை விட்டு வெளியேறிவிட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

The post கொழும்பு இரவு விடுதியில் ஏற்பட்ட மோதல் – சந்தேக நபர்களை கைது செய்ய விசாரணை குழுக்கள் appeared first on Oruvan.com.

யோஷிதவுடன் வந்து மோதலில் ஈடுபட்ட குழுவினர் – சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டனர்
கொழும்பு – யூனியன் பிளேஸில் உள்ள இரவு விடுதியில் ஏற்பட்ட மோதலில் தொடர்புடைய சந்தேக நபர்கள் இப்போது அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், குறித்த சந்தேக நபர்கள் தற்போது அவர்கள் வசித்த பகுதிகளை விட்டு தப்பிச் சென்றுவிட்டதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சந்தேக நபர்களைக் கைது செய்வதற்கான விசாரணைகளை பொலிஸார் தற்போது முன்னெடுத்துள்ளனர்.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகன் யோஷித ராஜபக்வுடன் வந்த ஒரு குழுவினர், இரவு விடுதியில் இருந்த பாதுகாப்பு அதிகாரியைத் தாக்கியுள்ளனர்.

களியாட்ட நிகழ்வில் கலந்து கொண்ட இவர்களில் ஒருவரின் கையில் அணிந்திருந்த ஆபரணம் ஒன்று தொடர்பாக இடம்பெற்ற வாக்குவாதத்தின் போது இவர்கள் எட்டு பேரும் அப்பாதுகாப்பு அதிகாரியை தாக்கியதாக தெரிவிக்கப்படுகின்றது.

களியாட்ட நிலைய முகாமையாளர் பொலிஸ் நிலையத்தில் செய்த முறைபாட்டுக்கு இணங்க சந்தேகநபர்கள் தேடப்பட்டு வருகின்றனர்

எவ்வாறாயினும், சம்பவம் இடம்பெற்ற போது யோசித்தவும் அவரது மனைவியும் அவ்விடத்தில் இருந்து சென்று விட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

The post யோஷிதவுடன் வந்து மோதலில் ஈடுபட்ட குழுவினர் – சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டனர் appeared first on Oruvan.com.

யோஷித்த ராஜபக்சவின் பாட்டி டெய்சி பொரெஸ்ட் கைது
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகன் யோஷித்த ராஜபக்சவின் பாட்டி டெய்சி பொரெஸ்ட் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பணமோசடி சட்டத்தின் கீழ் வாக்குமூலம் அளிக்க அவர் இன்று (05) குற்றப் புலனாய்வுத் துறைக்கு வந்திருந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அவர் கடுவெல நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

The post யோஷித்த ராஜபக்சவின் பாட்டி டெய்சி பொரெஸ்ட் கைது appeared first on Oruvan.com.

சி.ஐ.டியிலிருந்து வெளியேறினார் யோஷித ராஜபக்ச
குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு இன்று (3) காலை முன்னிலையாகியிருந்த முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் இரண்டாவது மகன் யோஷித ராஜபக்ச அங்கிருந்து வெளியேறியுள்ளார்.

சுமார் இரண்டு மணி நேரத்தின் பின்னர் அவர் வெளியேறியுள்ளார்.

கதிர்காமத்தில் அமைந்துள்ள அரசாங்கத்திற்கு சொந்தமான காணியின் உரிமை தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்காக குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்ட அவர், இன்று காலை 10 மணியளவில் அங்கு வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

The post சி.ஐ.டியிலிருந்து வெளியேறினார் யோஷித ராஜபக்ச appeared first on Oruvan.com.