Yoshitha Rajapaksa arrested Archives - Oruvan.com

UPDATE- யோஷித ராஜபக்ச கைது – மேலதிக விபரங்கள்
UPDATE-

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் இரண்டாவது மகன் யோஷித ராஜபக்ச இன்று (25) காலை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் கைது செய்யப்பட்டமை தொடர்பான மேலதிக விபரங்கள் தற்போது வெளியாகியுள்ளன.

ரத்மலானை, சிறிமல் பிரதேசத்தில் அமைந்துள்ள 34 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள வீடு மற்றும் காணியை வாங்கியது தொடர்பாக யோஷித ராஜபக்சவின் சந்தேகநபராகப் பெயரிட போதுமான ஆதாரங்கள் இருப்பதாக சட்டமா அதிபரால் கடந்த 23ஆம் திகதி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அறிவித்ததைத் தொடர்ந்து இந்தக் கைது இடம்பெற்றுள்ளது.

தற்போது தொடரப்பட்டுள்ள இந்த காணி வழக்கின் பிரதான சந்தேகநபர், யோஷித ராஜபக்சவின் பாட்டியான டெய்சி ஃபோரஸ்ட் என்ற பெண் ஆவார்.

இந்நிலையில், பணமோசடி சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள யோஷித ராஜபக்ச, வாக்குமூலம் பதிவு செய்த பின்னர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் பெலியத்த நுழைவாயிலுக்கு அருகில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டார்.

யோஷித ராஜபக்ச கைது

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகன் யோஷித ராஜபக்ச இன்று (25) காலை பெலியத்த பகுதியில் குற்றப் புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்தார்.

யோஷித ராஜபக்ச 2006 ஆம் ஆண்டு 5 ஆம் இலக்க பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றங்களைச் செய்ததற்கான போதுமான ஆதாரங்கள் இருப்பதாக சட்டமா அதிபர் தெரிவித்ததை அடுத்து இந்தக் கைது மேற்கொள்ளப்பட்டது.

அதன்படி, யோஷித ராஜபக்ச தொடர்பாக குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின்படி மேலும் நடவடிக்கை எடுப்பதற்காக இந்தக் கைது மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

கதிர்காமம் பகுதியில் உள்ள ஒரு காணியின் உரிமை குறித்து ஜனவரி 3 ஆம் திகதி யோஷித ராஜபக்ச குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் வாக்குமூலம் அளித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

The post UPDATE- யோஷித ராஜபக்ச கைது – மேலதிக விபரங்கள் appeared first on Oruvan.com.