Yemen Archives - Oruvan.com

யேமன் மீதான அமெரிக்க தாக்குதலில் குறைந்தது 30 பேர் பலி
யேமனின் வடக்கு மாகாணமான சாடாவில் ஆப்பிரிக்க குடியேறிகளை தடுத்து வைத்திருந்த தடுப்பு மையத்தின் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலில் குறைந்தது 30 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தடுப்பு மையத்தில் 115 கைதிகள் இருந்ததாகவும், தாக்குதலில் குறைந்தது 30 பேர் கொல்லப்பட்டதாகவும் ஹவுத்திகளுடன் இணைந்த அல் மசிரா தொலைக்காட்சி கூறுகிறது.

மேலும் 50 பேர் காயமடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர். அவர்களில் பெரும்பாலோர் கவலைக்குரிய நிலையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யேமனின் அதிகாரப்பூர்வ சபா நிறுவனம், பாதுகாப்பு ஆதாரத்தை மேற்கோள் காட்டி, டஜன் கணக்கான பாதிக்கப்பட்டவர்கள் இருப்பதாகவும், மீட்புக் குழுக்கள் குண்டுவெடிப்பால் ஏற்பட்ட தீயை அணைத்து வருவதாகவும் கூறுகிறது.

எவ்வாறாயினும், இந்த தாக்குதல் குறித்து அமெரிக்க இராணுவத்திடமிருந்து உடனடி கருத்து எதுவும் வெளியாகவில்லை.

The post யேமன் மீதான அமெரிக்க தாக்குதலில் குறைந்தது 30 பேர் பலி appeared first on Oruvan.com.

யேமனில் அமெரிக்க விமானத் தாக்குதல் – 53 பேர் உயிரிழப்பு
யேமனில் அமெரிக்க விமானத் தாக்குதல்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 53 ஆக உயர்ந்துள்ளதாக ஹவுத்தி கிளர்ச்சியாளர்களின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இறந்தவர்களில் ஐந்து குழந்தைகளும் அடங்குவதாக சுகாதார அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர்.

செங்கடலில் அமெரிக்க மற்றும் பிற கப்பல்கள் மீது ஹவுத்திகள் தாக்குதல்கள் மற்றும் கடத்தல்களை அதிகரிப்பதற்கு பதிலளிக்கும் விதமாக, சக்திவாய்ந்த வான்வழித் தாக்குதலை நடத்தியதாக அமெரிக்கா நேற்று அறிவித்தது.

இந்தத் தொடர் தாக்குதல்களுக்கு பதிலளிக்கும் விதமாக, ஹவுத்தி தலைவர் அப்துல் மாலிக் அல்-ஹவுத்தி, அமெரிக்கா யேமன் மீதான தாக்குதல்களை நிறுத்தும் வரை செங்கடலில் அமெரிக்க கப்பல்களை குறிவைத்து ஹவுத்தி போராளிகள் தாக்குதல் நடத்துவதை நிறுத்த மாட்டார்கள் என்று கூறியுள்ளார்.

இதற்கிடையில், யேமனில் ஹவுதி போராளிகள் கப்பல்களைத் தாக்குவதை நிறுத்தும் வரை குறிவைத்து தாக்குதல்கள் தொடரும் என்று அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் வலியுறுத்தியுள்ளார்.

The post யேமனில் அமெரிக்க விமானத் தாக்குதல் – 53 பேர் உயிரிழப்பு appeared first on Oruvan.com.

ஏமனில் இருந்து இஸ்ரேலை நோக்கி ஏவுகணைத் தாக்குதல் – 16 பேர் காயம்
ஏமனில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணை இஸ்ரேலின் டெல் அவிவ் அருகே விழுந்ததில் 16 பேர் காயமடைந்துள்ளனர்.

வான் பாதுகாப்பு அமைப்புகளால் ஏவுகணையை இடைமறிக்க முடியாமற் போனதால் இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் இஸ்ரேலிய தாக்குதல்களில் 77 பேர் கொல்லப்பட்டதாக காஸாவின் சுகாதார அமைச்சகம் அறிவித்ததையடுத்து , வெள்ளிக்கிழமையன்று இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களில் சுமார் 25 பலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளனர்.

காசாவின் குழந்தைகள் குளிர், நோய் மற்றும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளதாக யுனிசெஃப் எச்சரித்துள்ளது.

போரினால் பாதிக்கப்பட்ட பிரதேசத்தில் உள்ள 96 சதவீத பெண்கள் மற்றும் குழந்தைகளின் அடிப்படை ஊட்டச்சத்து தேவைகளை பூர்த்தி செய்ய முடியாதுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேல் – ஹமாஸ் மோதல் ஒரு வருடத்திற்கும் மேலாக நீடிக்கும் நிலையில் இதுவரை 45 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் 107,512 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

6

The post ஏமனில் இருந்து இஸ்ரேலை நோக்கி ஏவுகணைத் தாக்குதல் – 16 பேர் காயம் appeared first on Oruvan.com.