Yash Dayal Archives - Oruvan.com

யாஷ் தயாள் என்னை ஏமாற்றவிட்டார் – பெண் பரபரப்பு புகார்
ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் யாஷ் தயாள்க்கு எதிராக உத்திரபிரதேசம் மாநிலம் காசியாபாத் நகரை சேர்ந்த பெண் ஒருவர் திருமண மோசடி முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளார்.

இதுகுறித்து, அம்மாநில முதலமைச்சர் தனிப்பிரிவுக்கு முறைப்பாடு ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், கடந்த ஐந்து ஆண்டுகளாக, தன்னுடன் நன்றாக பழகிய யாஷ் தயாள், திருமண ஆசை காட்டி, பல மோசடிகளை செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஐந்து ஆண்டுகளாக நானும், யாஷ் தயாளும் நன்றாக பழகினோம். திருமணம் செய்துகொள்கிறேன் எனக் கூறி, அவரது குடும்ப நபர்களிடம் என்னை ‘மருமகள்’ என அடையாளப்படுத்தினார்.

இதனை நம்பி அவரிடம் பல வழிகளில் ஏமாந்துவிட்டேன். பணத்தையும் இழந்தேன், என்னையையும் இழந்தேன். ஐந்து ஆண்டுகள் நன்றாக பழகிய நிலையில், தற்போது அவர் என்னை ஏமாற்றிவிட்டார்.

என்னுடன் அடிக்கடி சண்டை போட ஆரம்பித்தார். மேலும், திருமணம் செய்துகொள்ள முடியாது எனக் கூறிவிட்டார். அதன்பின்னர் தான், எனக்கு ஒரு உண்மை தெரிய வந்தது, அவர் வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பில் இருக்கிறார் என்பது.

இதுகுறித்து, ஜூன் 14ஆம் திகதி 181 என்ற பெண்கள் உதவி எண்ணிற்கு அழைத்தேன். இதுகுறித்து முறைப்பாடும் செய்திருந்தேன். எனினும், முறைப்பாட்டை பதிவுசெய்ய மறுத்துவிட்டனர்.

இதனால்தான், தற்போது முதல்வர் தனிப்பிரிவில் புகார் கொடுத்துள்ளேன். எனக்கு நியாயம் கிடைக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

மேலும், ‘‘என்னிடம், யாஷ் தயாள் பேசியதற்காக வாட்சப் சேட்கள் இருக்கிறது. வீடியோ அழைப்பில் பேசிய ஆதாரம் இருக்கிறது. இருவரும் ஒன்றாக இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்களும் இருக்கிறது.

எனக்கு நியாயம் வேண்டும். இது எனக்கான நியாயம் மட்டுமல்ல, பாதிக்கப்பட்ட அனைத்து பெண்ணிற்கும் நியாயம் கிடைக்கும் என்ற நீதிக்கான நியாயம். உரிய நடவடிக்கையை உடனே எடுக்க வேண்டும்’’ என அந்தப் பெண் கூறியுள்ளார்.

அண்மையில் நடந்து முடிந்த 18வது ஐபிஎல் தொடரில் ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி முதல் முறையாக கிண்ணத்தை கைப்பற்றியிருந்தது. அணியின் வெற்றிக்கு யாஷ் தயாள் முக்கிய பங்காற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

The post யாஷ் தயாள் என்னை ஏமாற்றவிட்டார் – பெண் பரபரப்பு புகார் appeared first on Oruvan.com.